வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்! - SSLV D3 Rocket Launch - SSLV D3 ROCKET LAUNCH

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 9:15 AM IST

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) பூமியைக் கண்காணிக்கும் செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (ஆக.16) காலை 9:17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.மூன்று நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் திட வகையிலான எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோட் (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் எஸ்.ஐ.சி யுவி டோசிமீட்டர் (SiC UV Dosimeter) ஆகிய ஆய்வுக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும் என்றும், பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ விபத்துகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான ஆறரை மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை 2:47 மணிக்கு தொடங்கியது.இந்த ராக்கெட் திட்டமிடப்பட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு, சரியாக 13 நிமிடத்தில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலை https://isro.gov.in , https://youtube.com/live/DRmxoAb6vlo?feature=share… என்ற இஸ்ரோவின் இணையதளத்திலும், https://facebook.com/ISRO என்ற முகநூல் பக்கத்திலும், டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் நேரலையில் காணலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.