குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா.. இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கொடுத்த அப்டேட்! - ISRO former chairman Sivan - ISRO FORMER CHAIRMAN SIVAN
🎬 Watch Now: Feature Video
Published : May 19, 2024, 4:55 PM IST
சென்னை: குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா (Space Park) அமைப்பதால் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக ககன்யான் அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர் என்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது மிகவும் தேவையானது. இதனால், பூங்கா தொழிற்சாலைகள் அதிகமாக வரும். அப்படி அதிகளவில் தொழிற்சாலைகள் (Industries) வருவதால், அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் அந்த பகுதியே முழுவதுமாக வளர்ச்சி அடையும்” என்றார்.
இஸ்ரோவின் அடுத்த திட்டங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக ககன்யான் அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர். முதலில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.