பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் விமரிசையாக நடைபெற்ற திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா! - திரவுபதியம்மன் கோயில் - திரவுபதியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
Published : May 13, 2024, 6:04 PM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள எருமைப்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் அமைந்துள்ளது ஸ்ரீ திரவுபதியம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற (25ம் ஆண்டு) குண்டம் திருவிழா. கடந்த மே 10ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.மே11ம் தேதி காலை கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், அன்று இரவு தேர் இழுத்தல், குண்டம் பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோயிலில் முன்பாக 61 அடி நீளம் 11அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.மே 12ம் தேதி காலை சுமார் 7 மணிக்கு, பூசாரிகள் ஜோனி, கோபால், மெய்யப்பன் ஆகியோர் தலைமையில் விரதம் இருந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தியுடன் குண்டம் இறங்கினர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும், அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகளும் நடந்தன.இந்நிகழ்ச்சியில் வனவர்கள் உள்ளிட்ட வனத்துறையினர், எருமைப்பாறை, டாப்சிலிப், கோழிக்கமுத்தி, கூமாட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.இறுதியாக மே 13ம் தேதி மஞ்சள் நீராட்டு, சிறப்புப் பூஜைகளுடன் திருவிழா நிறைவடைந்தது.