LIVE: அமைச்சராக பொன்முடி பதவியேற்பு விழா நேரலை - Governor RN Ravi invited K Ponmudy - GOVERNOR RN RAVI INVITED K PONMUDY
🎬 Watch Now: Feature Video
Published : Mar 22, 2024, 3:32 PM IST
|Updated : Mar 22, 2024, 3:45 PM IST
சென்னை: உச்சநீதிமன்றத்தின் நேரடி தலையீட்டிற்கு பிறகு, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு மீண்டும் பதவியேற்க பொன்முடிக்கு அமைச்சராக பதவியேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். அதன் நேரலை...அவருக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியத்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவரை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே, ஆளுநர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய போதும், தண்டனை தான் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது; அவரை நிரபராதி என நீதிமன்றம் எனக் கூறவில்லை என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்யாமல் இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசுக்கு அவர் கடிதமும் அனுப்பியிருந்தார்.இதனிடையே, இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு, தலைமை நீதிபதி சந்திர சூட் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'குற்றவாளி' என்ற தீர்ப்பை நிறுத்திவைத்தப் பிறகும் கூட, பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைப்பது எப்படி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என ஆளுநர் எப்படி கூறமுடியும்? என நீதிபதி கேள்வியெழுப்பி இருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த இரவு முழுவதும் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 22, 2024, 3:45 PM IST