காவடி - வேல் காம்பினேஷனில் பரதநாட்டியம்.. கம்பத்தில் மாணவிகள் சாதனை! - Bharatanatyam world record - BHARATANATYAM WORLD RECORD
🎬 Watch Now: Feature Video
Published : May 26, 2024, 9:32 PM IST
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு நடன பயிற்சி பள்ளி சார்பில் 'காவடியும் வேலும்' என்ற தலைப்பில் உலக சாதனை படைப்பிற்காக மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தேனி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 முதல் 14 வயது வரையுள்ள 150 மாணவிகள் பங்கேற்று 15 நிமிடங்கள் இடைவிடாமல் காவடி மற்றும் வேல் வைத்து பரதநாட்டியம் ஆடினர். இந்த நிகழ்வை திருச்சியைச் சேர்ந்த விரிக் ஷா புக் ஆஃப் வேல்டு ரெகார்ட் (உலக சாதனை விருது) என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்தது. இதில் நிறுத்திய மங்கை, நிறுத்திய வேலன் என்ற 2 விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பின்னர், உலக சாதனை படைத்த மாணவிகள் மற்றும் லய பாவரேணு நிறுத்தியாலாயா நடன பயிற்சி பள்ளிக்கு தனியார் பள்ளியின் தாளாளர் திருமலை சந்திரசேகரன், விரிக் ஷா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் (உலக சாதனை விருது) நிறுவனத்தின் நடுவர் ரெங்கநாயகி உலக சாதனை விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.