கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானைகள்; வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை! - elephants roaming on kotagiri road - ELEPHANTS ROAMING ON KOTAGIRI ROAD
🎬 Watch Now: Feature Video
Published : Jun 11, 2024, 5:43 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியை விட்டு கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகின்றன.
இதனால் மனித - விலங்கு மோதல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் சென்று வரக்கூடிய கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அவசியமின்றி வனச் சாலைகளில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கோத்தகிரி இரண்டாம் வளைவில் யானைக் கூட்டம் உலா வந்தது. இதனை வனத்துறையினர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும், வாகன ஓட்டிகள் கவனமுடன் சாலையில் சென்று வர வேண்டுமென வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதனிடையே, கோத்தகிரி இரண்டாம் வளைவில் யானைக் கூட்டம் உலா வருவது தொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.