நீலகிரி வனப்பகுதியில் காட்டுத்தீ; 2 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம் - Fire incident in Nilgiris hills
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-03-2024/640-480-20972052-thumbnail-16x9-nii.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 13, 2024, 9:55 AM IST
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அருகே உள்ள பாரஸ்டேல் பகுதியில் நேற்று (மார்ச் 12) திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதைக்கண்டு அதிச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்தனர். பின்னர், பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மளமளவென எரிந்த இந்த காட்டுத்தீயின் காரணமாக, அப்பகுதி முழுவதும் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால், சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி எரிந்து நாசாமாகி இருக்காலாம் எனவும் அரியவகையான வனவிலங்குகள் மற்றும் பறவைகள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகாரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பச்சைபசேலென காட்சியளிக்கும் நீலகிரி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், காய்ந்த சருகுகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவி வருகிறது. இதில் அரியவகை மரங்கள் தாவரங்கள் எரிந்து வருகின்றன.
மேலும், வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளும் வறண்டு விடுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் நகரப் பகுதியில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. இதனைத் தடுப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதி உள்ள சாலை ஓரங்களில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி தீ மூட்டி சமைக்க வேண்டாம் எனவும், அனுமதி இல்லாமல் வனப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.