LIVE: விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்! - EPS ELECTION CAMPAIGN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 7:20 PM IST

Updated : Apr 14, 2024, 10:06 PM IST

thumbnail
விழுப்புரம்: அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலை காட்சிகளைக் காணலாம்...தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் மிகவும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில், நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் குமரகுரு- யை ஆதரித்து அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணியளவில் தனி தொகுதியான விழுப்புரத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஜெ.பாக்யராஜ்-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அரியலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 14, 2024, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.