கணவரை இழந்து தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய இபிஎஸ்; பெண் கண்ணீர் மல்க நன்றி! - எடப்பாடி பழனிசாமி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-03-2024/640-480-20876530-thumbnail-16x9-eps.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 1, 2024, 2:56 PM IST
சென்னை: திருநின்றவூரைச் சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளி தம்பதி ராஜம்மாள் - ஞானவேல், இவர்களுக்குப் பிறந்த 2 குழந்தைகளும் ஒன்று மனநலம் குன்றியும், மற்றொன்று செவி குறைபாடுடனும் பிறந்துள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜம்மாளின் கணவர் ஞானவேல் திடீரென உயிர் இழந்துள்ளார். மிகவும் வறுமையால் வாடிய இந்தக் குடும்பம், கணவரின் இறுதிச் சடங்கைச் செய்யக்கூட முடியாமல் தவித்து வந்துள்ளது.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இறுதிச் சடங்கிற்கான தொகையை வழங்காமல், மாற்றுத்திறனாளி நலத்துறை வாரியமும் ராஜம்மாளை அலைக்கழித்து வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து செய்திகளின் வாயிலாகத் தகவலறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ராஜம்மாள் வீட்டிற்குச் நேரில் சென்று ராஜம்மாள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமின்றி, ரூ.25 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கினார். மேலும் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தங்களை அழைக்கலாம் எனவும் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கரங்களைப் பற்றிக்கொண்டு ராஜம்மாள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.