மணீப்பூரில் உயிரிழந்த சிஆர்பிஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தேனியில் நல்லடங்கம் - ETV Bharat Tamil News

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:59 AM IST

தேனி: மணிப்பூர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையில் உதவி சார்பு ஆய்வாளராக பணியாற்றிய நாகராஜன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க மத்திய ரிசர்வ் காவல்துறையினரின் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று (ஜன.28) தகனம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, பாப்பா தம்பதியினரின் மகன் நாகராஜன்(57). இவரது மனைவி ராமலட்சுமி என்ற மனைவியும், திவாகர் மற்றும் ரோகித் என இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் மணிப்பூர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையில் உதவி சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

எனவே, அவரது உடல் நேற்று காலை ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்க்கு வந்து அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலம் கொண்டுவரப்பட்டு நான்கு ரோடு பகுதியில் அவரது உடல் வைக்கப்பட்டு கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், மத்திய ரிசர்வ் காவல்துறையின் காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறையின் சார்பில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் ஞான ரவி (பொறுப்பு) தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், நடுப்பட்டி பகுதியில் உள்ள அரசு பொது மயானத்தில் 21 குண்டுகள் முழங்க முழு காவல் துறையினர் மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.