கோவையில் வள்ளி கும்மி ஆட்டம்.. கவனத்தை ஈர்த்த மழலைகளின் நடனம்! - வள்ளி கும்மி வீடியோ
🎬 Watch Now: Feature Video
Published : Feb 22, 2024, 8:32 PM IST
கோயம்புத்தூர்: கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரபலமான, பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகளான வள்ளி கும்மியாட்டம், பவளக் கும்மி,ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட தொன்மையான நடனக் கலைகள் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் ஆடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாகச் சங்கமம் கலைக்குழுவினர் வள்ளி கும்மி ஆட்டத்தைப் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இலவசமாகக் கற்றுக்கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொண்ட கருமத்தம்பட்டி மாணவர்கள் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நடைபெற்ற அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு நடனமாடினர். இதில் 3 வயது சிறுவர்,சிறுமியர் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி 100க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒரு சேர கும்மிப் பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர். அரங்கேற்ற விழாவில் சிவன்,முருகன், விநாயகர் உள்ளிட்ட கடவுள்களின் வேடங்களில் வந்த நடனக் கலைஞர்கள் குழந்தைகளுடன் இணைந்து கும்மிப் பாடல்களுக்கு நடனமாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.