மாம்பழம் பிழிந்து வெற்றியைக் கொண்டாடிய பொள்ளாச்சி திமுகவினர்! - VIKRAVANDI BY ELECTION RESULT - VIKRAVANDI BY ELECTION RESULT
🎬 Watch Now: Feature Video
Published : Jul 13, 2024, 4:04 PM IST
கோயம்புத்தூர்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்பட 29 பேர் களம் கண்டனர். இதனைத் தொட்ர்ந்து, இன்று காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 20 சுற்றுகள் முடிவில் 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கோயம்புத்தூர், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக நகர மன்றத் தலைவர் சியாமளா தலைமையில் திமுகவினர் மாம்பழத்தை கையில் வைத்து பிழிந்தும், பட்டாசு வெடித்தும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பாத்திமா, கவிதா, போர்வெல் துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.