LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்றைய நிகழ்ச்சிகள் நேரலை - tamil nadu assembly - TAMIL NADU ASSEMBLY
🎬 Watch Now: Feature Video
Published : Jun 29, 2024, 9:37 AM IST
சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டமசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். அதன் நேரலை காட்சிகள்..தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனர்.இன்றைய கூட்டத்தில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ல் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் தாக்கல் செய்யப்படும் என நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டமசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து வருகிறார்.முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு நாளை சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.