மீன் கடைகள் அகற்றப்பட்டதற்கு எதிராக சென்னை பட்டினப்பாக்கம் வியாபாரிகள் போராட்டம்! - chennai loop road fish protest - CHENNAI LOOP ROAD FISH PROTEST
🎬 Watch Now: Feature Video
Published : May 18, 2024, 4:22 PM IST
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பொதுமக்கள் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல் வியாபாரிகள் தங்களுடைய மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென வந்த மாநிகராட்சி அதிகாரிகள், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கடைகளை அப்புறப்படுத்தி மீன்கள் மற்றும் கருவாடுகளை கீழே கொட்டி விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மீன் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், "மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென வந்து எங்களுடைய கடைகளில் உள்ள மீன்களை கீழே கொட்டி விட்டுச் சென்றனர். இதனால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதேபோல், திடீரென அகற்றப்பட்டதற்கு உரிய காரணம் தெரிவிப்பது மட்டுமல்லாமல், மாற்று ஏற்பாடும் செய்து தர வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.