LIVE: திருவண்ணாமலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோட் ஷோ! - rajnath singh election campaign - RAJNATH SINGH ELECTION CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-04-2024/640-480-21239076-thumbnail-16x9-bjp.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Apr 16, 2024, 4:46 PM IST
|Updated : Apr 16, 2024, 5:29 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்-யை ஆதரித்து இன்று (ஏப்ரல் 16) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திருவண்ணாமலையில் ரோட் ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். அதன் நேரலை காட்சிகளை காணலாம்...தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தேசிய கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன்-யை ஆதரிக்க, சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராஜ்நாத் சிங் திருவண்ணாமலை வருகை தந்தார். பின்னர், திருமஞ்சன கோபுர வீதி, திருவூடல் வீதி, கடலைக்கடை சந்திப்பு, தேரடி வீதி வழியாகக் காந்தி சிலை இருந்த இடத்தில் ரோட் ஷோ மேற்கொள்கிறார். மேலும், அங்குப் பரப்புரை மேற்கொண்டு ரோட் ஷோ பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் சென்னைக்குத் திரும்புகிறார்.
Last Updated : Apr 16, 2024, 5:29 PM IST