கட்டடப் பொருட்களை திருட வந்த கொள்ளையன்... அலாரம் அடித்ததால் தப்பி ஓட்டம்! சிசிடிவி காட்சி வைரல்! - CCTV of Theft attempt in dindigul - CCTV OF THEFT ATTEMPT IN DINDIGUL
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-07-2024/640-480-22065999-thumbnail-16x9-cctv.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jul 28, 2024, 9:35 AM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் வேடசந்தூரைச் சேர்ந்த தமிழன் (வயது 22) என்பவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்வதற்காக கட்டிடம் கட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி இந்த கட்டிடத்தில் திருட வந்த இரண்டு மர்ம நபர்கள், சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் தலை தெறிக்க தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் இன்று (ஜூலை 28) அதிகாலை 3:19 மணியளவில் ஒரு மர்ம நபர், கையில் ரம்பத்துடன் கட்டுமான இடத்தில் உள்ள செட்டின் பூட்டை அறுக்க முற்பட்டுள்ளார். அப்போது சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்ட சைரன் ஒலிக்க ஆரம்பித்ததால், மர்ம நபர் தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: “பத்து பதினஞ்சு நாளா அலையுறோம்.. பருப்பு இருந்தா பாமாயில் இருக்கிறதில்ல..” கோவில்பட்டி அருகே வேதனை! - Palm oil issue in Ration shops