காத்திருந்த பயணிகள் மீது தாறுமாறாக மோதிய தனியார் பேருந்து.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! - CCTV video of bus hit passengers - CCTV VIDEO OF BUS HIT PASSENGERS
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-05-2024/640-480-21411051-thumbnail-16x9-acci.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 7, 2024, 7:41 PM IST
கோயம்புத்தூர்: சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம் வழியாக கணுவாய் செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று (மே 6) அதிகாலை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, காவல்துறை சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதியது.
மேலும், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் மீதும் எதிர்பாராத விதமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகளுள் கார்த்திக் என்பவருக்கு காலிலும், முருகேசன் என்பவருக்கு இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காயமடைந்த கார்த்தி மற்றும் முருகேசன் ஆகியோர் இந்த விபத்து தொடர்பாக காந்திபுரம் போக்குவரத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் பேருந்து ஓட்டுநர் சஞ்சீவி என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே விபத்து ஏற்பட்ட போது, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து குறிந்த காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.