Live: திருச்சியில் ஜெ.பி.நட்டா ரோட் ஷோ! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 7, 2024, 7:32 PM IST
|Updated : Apr 7, 2024, 8:07 PM IST
திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.இந்த தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, திருச்சி சாலை ரோட்டில் இருந்து உறையூர் நாச்சியார் கோவில் வரை ரோட் ஷோவில் பாரதி ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா கலந்து கொண்டு, பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வருகிறார். இதன் காட்சிகளை தற்போது நேரலையாகப் பார்க்கலாம்.மேலும் இந்த ரோட் ஷோவைத் தொடர்ந்து, உறையூர் நாச்சியார் கோயில் அருகே பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா உரையாற்ற உள்ளார்.இதற்கு முன்னதாக, பாஜக நிர்வாகி ராஜசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று (ஏப்.07) திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கக் கோரி அவசர வழக்காக மனுத்தாக்கல் செய்ததில், கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பாஜகவினர் தேர்வு செய்த பாதைக்கு மாற்றுப் பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 7, 2024, 8:07 PM IST