Ayodhya Ram Temple Kumbabishekam live: "ஜெய் ஸ்ரீராம்" அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரலை.. - Jai Shree Ram

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 8:58 AM IST

Updated : Jan 22, 2024, 3:36 PM IST

அயோத்தி: உலக புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெகு விமரிசையாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை நேரலையில் காணலாம்..

அயோத்தி ராமர் கோயில் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று ஜன.22 ஆம் தேதி கருவறைக்குள் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலைக்கு ஆகம விதிகளின் படி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பிரதமர் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த சடங்குகளை 121 ஆச்சார்யார்கள் மேற்கொண்டனர். 

இன்று மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, பகல் 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1800 கோடி மதிப்பீட்டில் 'நகரா' கட்டக்கலை பாணியில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு கட்டப்பட்டுள்ளது. ஜன.20 ஆம் தேதி முதலே சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகளை 121 ஆச்சார்யார்கள் தொடங்கினர். 

இவ்விழா பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேசம் ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் நடக்கிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டது. கருவறைக்குள் ராமர் சிலை வைக்கப்படுவதற்கு முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 22, 2024, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.