செல்போன் திருடியவரை விரட்டிப் பிடித்த சிங்கம் போலீஸ்.. வைரலாகும் வீடியோ! - AMBATTUR POLICE MOBILE THIEF VIDEO - AMBATTUR POLICE MOBILE THIEF VIDEO
🎬 Watch Now: Feature Video
Published : Jun 14, 2024, 12:49 PM IST
சென்னை: சென்னை அம்பத்தூர் பகுதியில் நேற்று மாலை தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பத்தூர் வந்தார். இதற்காக அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அம்பத்தூரில் முதியவர் ஒருவரின் செல்போனை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்த எண்ணூர் போக்குவரத்து தலைமைக் காவலர் கருணாகரன் என்பவர், உடனடியாக அவரை விரட்டியுள்ளார். விடாது துரத்தி அவரை பிடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், செல்போனையும் பறிமுதல் செய்துள்ளார். இவ்வாறு செல்போன் திருடப்பட்ட ஐந்து நிமிடத்தில் திருடிச் சென்ற நபரை மடக்கிப் பிடித்து, முதியவரின் செல்போனை மீட்டுக் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளியான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.