புதுக்கோட்டையில் பெண்கள், சிறுமிகளுடன் கோலாட்டம் ஆடி நூதன முறையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 4, 2024, 8:33 PM IST
புதுக்கோட்டை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து மங்கனூர் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இருவருக்கும் அதிமுக சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் என பல்வேறு திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி, மின் கட்டணம் திமுக ஆட்சியில் உயர்ந்தது” என்றார். பின்னர் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கருப்பையாவுக்கு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் சேர்ந்து அதிமுக வேட்பாளர் கருப்பையா கோலாட்டம் ஆடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.