ஹெல்த் மினிஸ்டருக்கே ஹெல்த் அட்வைஸ் கொடுத்த தள்ளுவண்டி கடைக்காரர் - நடந்தது என்ன? - Minister Ma Subramanian - MINISTER MA SUBRAMANIAN
🎬 Watch Now: Feature Video
Published : Oct 4, 2024, 11:37 AM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று அதிகாலையில் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு அரசு வருகை தந்த அமைச்சர், மருத்துவமனையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவைப் பார்வையிட்டு, நோயாளிகளிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கலந்துரையாடி மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக எழுந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக, அமைச்சர் சூலூர் பகுதியில் உள்ள பிரபலமான சாலையோர தள்ளுவண்டி கடைக்குச் சென்று கூழ் குடித்தார். அப்போது பொதுமக்களுடன் இயல்பாக பேசிய அவர், கடைக்காரரிடம் கூழ் தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தினமும் காலை வேளையில் சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கூழ் குடித்து வந்தால் மூட்டு வலி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என அமைச்சரிடம் தெரிவித்த கடைக்காரர், தினமும் கூழ் அருந்துமாறு அமைச்சருக்கும் அட்வைஸ் கொடுத்தார். தற்போது இந்த வீடியோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதனை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.