அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் ஒழுகிய மழைநீர்.. பயணிகள் கடும் அவதி! - Rainwater flowing in the govt bus - RAINWATER FLOWING IN THE GOVT BUS

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 2:47 PM IST

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகும் காட்சிகளை பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு அண்டை மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணி அளவில் மதுரை செல்லும் அரசுப் பேருந்து வழக்கம்போல இயக்கப்பட்டுள்ளது.

அப்போது பெய்த கனமழையில் பேருந்தின் உள்ளே மழை நீர் ஒழுகியுள்ளது. மழை நீர் முழுவதும் பயணிகளின் இருக்கையில் விழுந்ததால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகும் காட்சிகளை அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு, மழைக்காலங்களில் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவது வாடிக்கையாகி உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.