10 நாட்களில் மூன்று இடங்களில் கைவரிசை! முகமூடி கொள்ளையனால் கலங்கும் வியாபாரிகள்! - 10 நாட்களாக கடைகளில் தொடர் திருட்டு
🎬 Watch Now: Feature Video
Published : Feb 14, 2024, 10:33 AM IST
புதுச்சேரி: கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வில்லியனூர் பகுதியில் உள்ள 3 கடைகளை உடைத்து சுமார் ரூ.4 லட்சத்தை முகமூடி மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த வில்லியனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வில்லியனூர், கண்ணகி பள்ளி அருகே உள்ள பாலமுருகன் பேக்கரியில் இரண்டாவது முறையாக ஷட்டரை உடைத்து, அதே நபர் திருட முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பேக்கரியில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் பேக்கரியில் இருந்து வெளியேறியுள்ளார். அதையடுத்து, அரியூர் மெயின் ரோட்டில் உள்ள பெஸ்ட் பார்மஸி என்ற மருந்தகத்தின் ஷட்டரை நெம்பி கடைக்குள்ளே சென்ற மர்ம நபர், அங்கிருந்து சுமார் ரூ.1.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். தற்போது அந்த மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வில்லியனுார் மற்றும் ரெட்டியார்பாளையம் பகுதியில் மட்டும், கடந்த 10 நாட்களில், சுமார் 7 கடைகளை உடைத்து ரூ.14.5 லட்சம் பணத்தை, ஒரே நபராக திருடிச் சென்றுள்ளார். மேலும் தொடர்ந்து அரங்கேறி வரும் திருட்டு சம்பவம், வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.