6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு.. ஆட்டிசம் பாதித்த மகனுக்காக கலந்து கொண்ட தந்தை! - Coimbatore Biriyani Competition

🎬 Watch Now: Feature Video

thumbnail

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகில், ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து அண்மையில் தனியார் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் பாபி குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று கடையின் விளம்பரத்திற்காக, அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சமும், 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.50,000, 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனையறிந்த ஏராளமானோர் கடை முன் குவிந்தனர். 

இப்போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் இரண்டாவது பிரியாணி சாப்பிடுவதற்கே திணறிய நிலையில், அங்கே இருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்பவர், போட்டியாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கணேச மூர்த்தி இரண்டு பிரியாணி, சாப்பிட்டு மூன்றாவது பிரியாணியை சாப்பிட துவங்கினார். ஆனால், இடையில் வாந்தி வந்ததால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது மகன் ஆட்டிசம் பாதித்தவர். அவரது மருத்துவச் செலவுக்காக தான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன். ஆறு பிரியாணியைச் சாப்பிட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கவில்லை என்றாலும், மூன்று பிரியாணி சாப்பிட்டு 25 ஆயிரம் ரூபாயாவது வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை" என வருத்தத்துடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.