அரியலூர்: குளித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! குளத்தில் ஹாயாக உலாவந்த முதலை.. சிக்கியது எப்படி? - The public caught the crocodile
🎬 Watch Now: Feature Video
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வீரசோழபுரத்தில் சுற்றித்திரிந்த முதலையை போலீசாரும், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பிடித்தனர். நீண்ட நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் லாபகரமாக பிடித்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் என்ற சிறிய குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தைப் பொதுமக்கள் குளிப்பதுக்கும் தங்களின் அன்றாட பயன்பாட்டிற்கும் எனப் பயன்படுத்தி வந்தனர். இக்குளத்தை பொதுமக்களை தங்களது கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, முதலை ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீன்சுருட்டி போலீசார் தீர்த்தகுளத்துக்கு வந்து உடனே வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வருவதற்குத் தாமதமானால் முதலை மீண்டும் குளத்துக்குள் சென்றுவிடும் என்பதால் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் முதலையை லாவகமாகப் பிடித்தனர். இதன் பின்னர், பிடிபட்ட முதலை வனத்துறையிடன் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் முதலையை அணைக்கரை வடவாறு பகுதியில் பத்திரமாக விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.