171வது ஆண்டு சப்பர பவனி திருவிழா; சேர்ந்தமரம் புனித சின்னப்பர் தேவாலயத்தில் கோலாகலம்! - ST CHINNAPPAR CHURCH FESTIVAL - ST CHINNAPPAR CHURCH FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Jul 1, 2024, 11:00 AM IST
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சேர்ந்தமரத்தில் புனித சின்னப்பர் தேவாலயத்தின் 171வது ஆண்டு சப்பர பவனி திருவிழா வெகு விமரிசையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த தேவாலயத்தில் திருவிழாவானாவது, கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கி 10 நாட்களாக தினமும் சிறப்பு திருப்பலி, ஆராதனைக் கூட்டத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர வீதி உலா 10ஆம் நாளான நேற்று நடைபெற்றது.
இதில் புனித இராயப்பர் ஒரு சப்பரத்திலும், சின்னப்பர் ஒரு சப்பரத்திலும், மேரி மாதா ஒரு சப்பரத்திலும் என மூன்று தனித்தனி சப்பரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித சின்னப்பர், இராயப்பர், மேரி மாதாவை வழிபட்டனர்.
சப்பர வீதி உலாவின் போது தேவாலய பக்தர்கள் புனித இராயப்பர், சின்னப்பர் மற்றும் மேரி மாதாவுக்கு பூமாலை, உப்பு, மிளகு, பணம் என காணிக்கையாக செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி கொண்டனர். விழாவில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணி ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.