2 நாட்களாக ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு! - mettupalayam king cobra

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 6:55 PM IST

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியை ஒட்டியுள்ள பாலப்பட்டி என்ற கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ராஜநாகம் ஒன்று இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் படுத்துக் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் வனப்பணியாளர்கள் பாம்புபிடி வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  

பின்னர் வன எல்லையில் புதருக்குள் பதுங்கி இருந்த ராஜநாகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாம்பு பிடி வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி அந்த ராஜநாகத்தை மீட்டு வெளியே எடுத்து வந்தனர். மீட்கப்பட்ட ராஜநாகம் சுமார் 12 அடி நீளம் இருந்துள்ளது. மேலும், அந்த பாம்பின் உடல்நிலை பற்றி வனத்துறையினர் ஆய்வு செய்த போது, உணவு எதுவும் உட்கொள்ள முடியாமல் சோர்வான நிலையில் இருந்தது தெரியவந்தது.  

இதன் காரணமாக பாம்பு எங்கும் ஊர்ந்து செல்ல முடியாமல் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், ஏற்கனவே பாம்பு இருந்த இடம் விவசாய நிலம் அருகே உள்ள பகுதி என்பதால், அங்கிருந்து மீட்கப்பட்ட ராஜநாகம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.