ETV Bharat / technology

ஆட்டம் காட்டும் சியோமி 15 சீரிஸ்: திக்கித்திணறி நிற்கும் சாம்சங், கூகுள்! - XIAOMI 15 SERIES LAUNCH

சியோமி நிறுவனம் தங்களின் புதிய சியோமி 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

XIAOMI 15 SERIES MOBILE LAUNCH WITH SD 8 ELITE KNOW THE FEATURES PRICE IN INDIA article thumbnail
சியோமி 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 30, 2024, 3:45 PM IST

சியோமி நிறுவனத்தின் பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்களின் வருகையை எதிர்பார்த்து பயனர்கள் காத்திருந்தனர். அதற்கு நிறுவனம், சியோமி 15 சீரிஸ் (Xiaomi 15 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவைத்து பதிலளித்துள்ளது. உலகின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட், 50 மெகாபிக்சல் லெய்கா மற்றும் சோனி டெலிஃபோட்டோ கேமரா (Leica / Sony Telephoto Camera), செராமிக் கண்ணாடி பாதுகாப்பு போன்ற பல மேம்பட்ட அம்சங்களை சியோமி 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கிறது.

இதில் முக்கியமானது என்னவென்றால், சாம்சங், கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் பிரீமியம் போன்களில் இல்லாத அம்சங்களை சியோமி தங்களின் 15 சீரிஸ் போன்களில் சேர்த்ததுதான். சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு எப்போது இருக்கும் என்பதை நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், இந்தியாவில் அறிமுகமாகும் நேரத்தில், சியோமி 15 சீரிஸில் உள்ள அடிப்படை மாடல் போனின் விலை சுமார் ரூ.60,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 15 அம்சங்கள்:

பெரும்பான்மையான அனைத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் அடிப்படை மாடலிலே சியோமி நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்படி, 15 சீரிஸ் அனைத்து மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேப்பர் லிக்விட் கூலிங் சேம்பர் (Vapour Liquid Cooling Chamber) மேம்படுத்தப்பட்டுள்ளது.

xiaomi 15 smartphone
சியோமி 15 ஸ்மார்ட்போன் (Xiaomi Global)
  • 6.36-அங்குல LTPO 120Hz, 3200 பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10+, டால்பி விஷன், சியோமி செராமிக் கண்ணாடி பாதுகாப்பு போன்றவற்றுடன் வரும் OLED திரை
  • 3nm (நானோமீட்டர்) ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
  • 16ஜிபி வரை LPDDR5x ரேம்
  • 1டிபி வரை யுஎஃப்எஸ் 4.0 (UFS 4.0) ஸ்டோரேஜ்
  • பின்பக்கம் லெய்கா 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன், 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 50 மெகாபிக்சல் இன்ஃபினிட்டி லெய்கா டெலிஃபோட்டோ கேமரா
  • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • 5,400mAh பேட்டரி
  • 90W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங்
  • ஐபி 68 பாதுகாப்பு
  • எடை: 181 கிராம்
  • அளவு: 152.3x71.2x8.08 மில்லிமீட்டர்

சியோமி 15 ஸ்மார்ட்போனில் இன்ஃபிராரெட் சென்சார், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், 4 மைக்ரோபோன்கள், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள், NFC, டைப்-சி 3.2 ஜென் 1, வைஃபை 7, ப்ளூடூத் 5.4 போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

சியோமி 15 ப்ரோ அம்சங்கள்:

சியோமி 15 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனின் கேமராவில் சற்று மேம்பாடுகள் உள்ளன. முக்கியமாக இதில் சாம்சங் அல்ட்ராவைட் சென்சாரும், சோனி நிறுவனத்தின் டெலிஃபோட்டோ லென்ஸும் பயன்படுத்தப்பட்டுள்ளது. படங்களை கூடுதல் தெளிவுதிறனுடன் கையாள இவ்வகை விலையுயர்ந்த சென்சார்களை சியோமி பயன்படுத்தியுள்ளது.

xiaomi 15 pro smartphone
சியோமி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் (Xiaomi Global)
  • 6.73-அங்குல LTPO 120Hz, 3200 பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10+, டால்பி விஷன், சியோமி செராமிக் கண்ணாடி பாதுகாப்பு போன்றவற்றுடன் வரும் OLED திரை

  • பின்பக்கம் லெய்கா 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன், 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சாம்சங் S5KJN1 சென்சார், 50 மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
  • 32 மெகாபிக்சல் ஆம்னிவிஷன் செல்ஃபி கேமரா
  • 6,100mAh பேட்டரி
  • 90W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங், மேக்னெட்டிக் சார்ஜிங் (Magnetic Charging)
  • ஐபி 68 பாதுகாப்பு
  • எடை: 213 கிராம்
  • அளவு: 161.3x75.3x8.35 மில்லிமீட்டர்

இதனுடன் சியோமி 15 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் NFC, டைப்-சி 3.2 ஜென் 1, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, இன்ஃபிராரெட் சென்சார், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், 4 மைக்ரோபோன்கள், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் போன்ற மேம்பட்ட அம்சங்கள் இருக்கும்.

இதையும் படிங்க
  1. ஐபோன் 16-ஐ தடை செய்த இந்தோனேசியா: காரணம் என்ன?
  2. வானில் பறந்தபடியே வீடியோ கால் பேசலாம்; கத்தார் ஏர்வேஸ் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்!
  3. பேருதான் ஐபோன்! உள்ள இருக்கறது எல்லாம் ஆண்ட்ராய்டு ஸ்பேர் பார்ட்ஸ் தான்!

சியோமி 15 சீரிஸ் விலை என்ன?

சியோமி நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டாப் மாடல் விலை ரூ.90,000-க்கு உள்ளாகவே பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுழலில், இதன் வகைகள் மற்றும் மாடல்களின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை என்ன என்பதைப் பார்க்கலாம்.

சியோமி 15
மாடல்விலை*
12ஜிபி + 256ஜிபிரூ.54,999
12ஜிபி + 512ஜிபிரூ.59,999
16ஜிபி + 512ஜிபிரூ.64,999
16ஜிபி + 1டிபிரூ.69,999
16ஜிபி + 1டிபி
(டைமண்ட் லிமிடெட் எடிஷன்)
ரூ.74,999
சியோமி 15 ப்ரோ
மாடல்விலை*
12ஜிபி + 256ஜிபிரூ.69,999
16ஜிபி + 512ஜிபிரூ.74,999
16ஜிபி + 1டிபிரூ.79,999
(*எதிர்பார்க்கப்படும் விலை)

இதில் சியோமி 15 பிளாக், வைட், அசகுசா கிரீன், லிலாக், பிரைட் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். முறையே, சியோமி 15 ப்ரோ மாடலானது ராக் ஆஷ், வைட், ஸ்ப்ரூஸ் கிரீன், பிரைட் சில்வர் ஆகிய நிறங்களில் கொண்டுவரப்படுகிறது. தற்போது சீனாவில் முன்பதிவை தொடங்கியுள்ள நிறுவனம், அக்டோபர் 31 முதல் சியோமி 15 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்த பயனர்களுக்கு விநியோகம் செய்யத் தொடங்கும் என சியோமி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.