விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது தகவல் தொடர்பு தான். இதை சரிகட்ட முதன்முறையாக ஸ்டார்லிங்க் (Starlink) இன்டர்நெட் இணைப்புடன் போயிங் 777 (Boeing 777) விமானத்தை இயக்க கத்தார் ஏர்வேய்ஸ் (Qatar Airways) திட்டமிட்டுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டமாக, அக்டோபர் 22 அன்று கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து லண்டனுக்கு, கத்தார் ஏர்வேஸின் போயிங் 777 விமானத்தில் ஸ்டார்லிங்க் வைஃபை சோதனை செய்யப்பட்டது. உலகின் முதல் வைஃபை இணைப்புக் கொண்ட போயிங் 777 விமானப் பயணம் இதுவாகும் என கத்தார் ஏர்வேஸ் குறிப்பிட்டிருந்தது.
வீடியோ அழைப்பில் இணைந்த எலான் மஸ்க்:
#QatarAirways launches the world’s first Boeing 777 Starlink-equipped flight. @Starlink
— Qatar Airways (@qatarairways) October 22, 2024
We are proud to be the airline that leads the way, setting new standards in the airline industry. ✈️#QatarAirwaysStarlink pic.twitter.com/347ZnclANb
இது தொடர்பான வீடியோவை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தங்களின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறது. அதில், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலர் பத்ர் முகமது அல் மீர் (Badr Mohammed Al Meer), அவர்களின் போயிங் 777 விமானத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) உடன் வீடியோ அழைப்பை மேற்கொள்கிறார். இதில் எலான் மஸ்க் மகிழ்ச்சியுடன் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறார். முகமது அல் மீர், தங்களால் இதை நம்ப முடியவில்லை எனக் கூறுகிறார். அதற்கு, பதிலளிக்கும் எலான் மஸ்க், இது மென்மேலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது எனத் தெரிவிக்கிறார்.
துல்லியமான சேவை:
What's it like flying with @Starlink Wi-Fi in the sky? ☁️
— Qatar Airways (@qatarairways) October 23, 2024
Hear from the first passengers to experience it on board ✈️ pic.twitter.com/SGjzsqNBNl
இந்த வீடியோவில் கத்தார் ஏர்வேஸ்-இன் போயிங் 777 விமானத்தின் சிறப்புகளை கேமரா வாயிலாக எலான் மஸ்க்கிற்கு, முகமது அல் மீர் காட்டிக்கொடுத்தார். அதில் வீடியோவின் தரம் சிறப்பாக இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. இவ்வளவு உயரத்திலும் சிறந்த இணைய சேவை கிடைக்கும் என்றால், மக்களுக்கு இது பயனுள்ளதாக அமையப்போகிறது.
முக்கியமாக, வெகுதூர விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், வீட்டாருக்கும் உடனானத் தொடர்பு விமானத்தில் ஏறியவுடன் முறிந்துவிடும். பின்னர், விமானத்தில் இருந்து இறங்கியப்பிறகு தான் அவர்களைத் தொடர்புகொள்ள முடியும். இந்த கவலையை இந்த ஸ்டார்லிங்க், கத்தார் ஏர்வேஸ் இணைப்பு போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க |
ஸ்டார்லிங்க் இணைய சேவை என்றால் என்ன?
புவி வட்ட பாதையில் சில செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும். இதில் இருந்து பயனாளிகளுக்கு இணைய சேவை வழங்கப்படும். இந்த சேவை வழங்குவதில் முதன்மை நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’. அமேசானின் புராஜெக்ட் குயிப்பர் (Project Kuiper), டெலிசாட் போன்றவை ஸ்டார்லிங்கிற்கு சந்தையில் போட்டி நிறுவனங்களாக உள்ளன.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.