ETV Bharat / technology

வாட்ஸ்அப் கொடுத்த புதிய அப்டேட்.. இனிமேல் நோட்ஸ், பின் உள்ளிட்ட வசதிகள்! - Whatsapp Update - WHATSAPP UPDATE

Whatsapp new Update: வாட்ஸ் அப் பயனர்களுக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வரும் மெட்டா நிறுவனம், தற்போது வாட்ஸ் அப்பிலேயே நோட்ஸ் எடுத்து கொள்ளும் வசதி மற்றும் 5 காண்டாக்ட்டுகளை பின் செய்து கொள்ளும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 12:08 PM IST

சென்னை: தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், தற்போது அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. முதலில் படித்தவர்களும், இளைஞர்களும் மட்டுமே பயன்படுத்தி கொண்டிருந்த வாட்ஸ்அப்-ஐ இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப்பை பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அனைவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

அதற்கேற்றவாறு வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும், வாட்ஸ்அப் பயனாளர்களுக்காக புதுப்புது அப்டேட்களை அவ்வப்போது வழங்கி வருகிறது. மெசேஜ் செய்வதற்காக தொடங்கப்பட்ட செயலியில், தற்போது வாய்ஸ் மெசேஜ், ஸ்டேட்டஸ், வாய்ஸ் ஸ்டேட்டஸ், வீடியோ கால், வாய்ஸ் கால், பணப்பரிமாற்றம், வாட்ஸ் அப் சேனல்கள், ஸ்டிக்கர், வாக்கெடுப்பு (Polls) என பல சேவைகள் உள்ளன. சமீபத்தில் ஒரு வாட்ஸ்அப் செயலியில் இரண்டு அக்கௌண்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வசதி வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.

இது மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடும் போது குறிப்பிட்ட சிலரை டேக் (Tag) செய்து வைப்பது போல், வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ் போடும் போது, குறிப்பிட்ட சிலரை டேக் செய்து வைக்கும் வசதி, இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட ஸ்டோரிக்கு ரியாக்ட் செய்யும் வசதி இருப்பது போல், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்க்கும் ரியாக்ட் செய்யும் வசதி, ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இருக்கும் நியர்பை சேர் (Near By Share) வசதி போன்று வாட்ஸ் அப்பிலும் இன்டர்நெட் வசதி இல்லாமல் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரும் வசதி போன்றவற்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளன.

இதையும் தாண்டி, ஏஐ (AI - Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தையும் வழங்கியுள்ளது. கூகுளில் நாம் ஏதாவது ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் அதைப்பற்றி கூகுளில் தேடுவோம் அல்லவா?. அதற்கு அவசியமல்லாமல் வாட்ஸ் அப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் ஏஐ வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கே கிடைக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.

பின் செய்து கொள்ளும் வசதி: வாட்ஸ் அப்பில் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்பவர்களை தேடி எடுத்து மெசேஜ் செய்ய வேண்டாம் என்பதற்காக வாட்ஸ்அப்பின் (PIN) வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால் இதுவரை மூன்று நபர் அல்லது குழுவையோ தான் பின் செய்ய முடியும் என்று இருந்தது. தற்போது இது 5ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக இனிமேல் 5 நபர்கள் அல்லது குழுவை பின் செய்து கொள்ளலாம்.

நோட்ஸ் எடுத்து கொள்ளும் வசதி: தொழில் சார்ந்த விசயங்கள், நினைவுப்படுத்த வேண்டிய விசயங்கள் போன்றவற்றை மொபைலில் உள்ள நோட்ஸ் என்ற செயலி மூலம் நாம் நோட்ஸ் எடுத்து கொள்வோம். இனிமேல் வாட்ஸ் அப்-லேயே நோட்ஸ் எடுத்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் நிதி சார்ந்த தகவல்கள், தொழில் சார்ந்த தகவல்கள் போன்றவற்றை நோட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதில் லாக் வசதி இருப்பதால், இந்த தகவல்களை உங்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது.

இதையும் படிங்க: இனி எக்ஸ் தளத்தில் போஸ்ட் பதிவிட கட்டணம்? புதிய பயனர்களுக்கு செக் வைத்த எலான் மஸ்க்! - Elon Musk

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.