ETV Bharat / technology

இனி பயமில்லாமல் தூங்கலாம்: 'மிஷன் மெளசம்' திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்! - Mission Mausam Explained - MISSION MAUSAM EXPLAINED

Mission Mausam: காலநிலை மாற்றத்தை முன்னதாகவே கணித்து, இழப்புகளை குறைக்கும் புதிய 'மிஷன் மெளசம்' திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து, ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

mission mausam
மிஷன் மெளசம் திட்டம் என்றால் என்ன என்பதன் விளக்கத்தைப் பார்க்கலாம். (ETV Bharat / Meta)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 27, 2024, 5:20 PM IST

சென்னை: இந்தியாவில் மாறிவரும் காலநிலை நிலவரங்களை உணர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஒன்றிய புவியியல் அமைச்சகத்தின் கீழ் 'மிஷன் மௌசம்' (Mission Mausam) திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், முக்கியமாக இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, அதனால் ஏற்படும் பொருள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர் 11ஆம் தேதி, ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பானத் தகவல்களை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப கழகத்தின் (NIOT) இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

கடல் ஆய்வில் இந்தியாவின் புதிய திட்டங்கள் குறித்து தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத்திற்கு அளித்தப் பேட்டி. (ETV Bharat)

திட்டத்தின் அவசியம்:

நாட்டில் சமீபகாலங்களில் நிகழ்ந்து வரும் இயற்கை பேரிடர்கள், குறிப்பாக வெள்ளம், காற்று மழை, நிலச்சரிவு போன்றவற்றால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டில் நடந்த விபத்துக்களில், 35% பேரிடர்களால் ஏற்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கியதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், காலநிலை மாற்றங்களைப் புரிந்து கொண்டு, துல்லியமான காலநிலை முன்னறிவிப்புகளை உருவாக்குவதே 'மிஷன் மௌசம்' திட்டத்தின் முக்கிய இலக்காகும்.

முன்னேற்ற முயற்சிகள்:

2012-ஆம் ஆண்டு, 'பருவமழை மிஷன்' (Monsoon Mission) என்ற திட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிமுகப்படுத்தி, பருவமழை குறித்து கணிப்புகளை மேற்கொண்டது. ஆனாலும், இந்தியாவின் வானிலை முன்கணிப்பு கருவிகளில் ஏற்பட்ட குறைகளால், வெள்ளம் மற்றும் வறட்சியை சரியாகக் கணிக்க இயலாமல் போனது.

இதனால், புதிதாக ஒப்புதல் பெறப்பட்டுள்ள 'மிஷன் மௌசம்' திட்டத்தில், சென்சார் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வானிலை மாறுபாடுகளை மிகத் துல்லியமாக கணிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

திட்டத்தின் அம்சங்கள்:

  • 'மிஷன் மௌசம்' திட்டத்தின் முக்கிய அம்சம், டாப்ளர் ரேடார்கள் (Doppler Radar), காற்று தகவல் சேகரிப்பு கருவிகள், கதிர் வீச்சு அளவைகள் ஆகியவற்றின் பயன்பாடு.
  • இந்தியா முழுவதும் 70 புதிய டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படவுள்ளன.
  • 10 காற்று தகவல் சேகரிப்பு கருவிகள் மற்றும் 10 கதிர்வீச்சு அளவைகள் இணைக்கப்பட உள்ளது.
  • மேம்பட்ட செயற்கைக்கோள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தி வானிலை மாற்றங்களை கண்காணிக்கவும், தரவுகளை திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிற நாடுகளுடனான ஒப்பீடு:

  • சீனாவில் 217 டாப்ளர் ரேடார்கள் மற்றும் 128 காற்று தகவல் சேகரிப்பு கருவிகள் செயல்படுகின்றன.
  • அமெரிக்காவில் 160 ரேடார்களும், 100 காற்று அளவைகள் கருவிகளும் செயல்படுகின்றன.
  • இந்தியா இந்த தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்து, இன்னும் மேம்பட்ட நிலையைக் கொள்வதே திட்டத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.

தொழில்நுட்பத்தின் பயன்கள்:

  • அதிநவீன வானிலை முன்கணிப்பு தொழில்நுட்பம் வாயிலாக புயல், பருவமழை, காற்று மாசு, வேகமான வானிலை மாற்றங்கள் போன்றவற்றை முன்கூட்டியே அறிய முடியும்.
  • விவசாயம், பேரிடர் மேலாண்மை, விமானப் போக்குவரத்து, சுற்றுலா, பாதுகாப்பு துறைகளில் இந்த தகவல்கள் பயன்படும்.
  • இதன் வாயிலாக இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், பொருளாதார இழப்புகளை தடுக்கும் விதமாக வானிலை மாற்றங்களை துல்லியமாகக் கணிக்க முடியும்.

மிஷன் மௌசம் திட்டத்தின் பயன்கள்:

இதனால், இந்தியாவின் வானிலை முன்கணிப்பில் 10% அளவு மேம்பாடு பெறும். மேலும், 10 முதல் 15 நாள்களுக்கு முன்னதாகவே வானிலை மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். கூடுதலாக, கிராமப்புற பகுதிகளில் கூட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வாய்ப்பு பெரும்.

'மிஷன் மௌசம்', இந்தியாவில் வானிலை மாற்றங்களை நேரடியாக கணிப்பதற்கான மிக முக்கியமான திட்டமாக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும் அரணாகப் பார்க்கப்படுகிறது.

Etv Bharat Tamil Nadu WhatsApp Channel
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய (ETV Bharat)

இங்கே கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க:

  1. சந்திரயான் திட்டம்: நிலவில் 160 அடி அகலம் உள்ள பள்ளம் கண்டுபிடிப்பு! - PRAGYAN ROVER FOUND WIDE CRATER
  2. உள்நாட்டு தயாரிப்பு.. மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் சென்னையில் அறிமுகம்! - EV Charging Machine In Chennai
  3. வரலாறு படைத்த ஸ்பேஸ்-எக்ஸ்: சாதனைப் பாதையின் 10 முக்கிய நிகழ்வுகள்! - spacex private spacewalk

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.