ஹைதராபாத்: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் பெரும்பாலானோர் புதிய வாகனங்களை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்தியில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளை பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றனர். அப்படியான அதிக மைலேஜ் தரக்கூடிய சிறந்த ஐந்து பைக்குகளை பற்றிய முழு விவரங்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.
ஹீரோ HF டீலக்ஸ் (Hero HF Deluxe): இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மிகவும் குறைந்த விலையில் உள்ளது, Hero MotoCorp-ன் பட்ஜெட் மோட்டார்சைக்கிள் ஹீரோ HF டீலக்ஸ் ஆகும். இந்த பைக் ஹீரோ நிறுவனத்தால் அக்டோபர் 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு வடிவமைப்பு சார்ந்த சில மேம்படுத்தல்களையும் பெற்றது. இந்த பைக் கம்யூட்டர் செக்மென்ட்டில் (Commuter Segment) உள்ள மக்களின் விருப்பமான பைக்காக உள்ளது. மொத்தம் ஐந்து வகைகளில் இந்த பைக்கை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்கிறது.
- என்ஜின் - 97.2 cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின்
- பவர் - 7.9 bhp
- டார்க் - 8.05 NM
- மைலேஜ் - 65 kmpl
- விலை - ரூ.56,308 முதல் ரூ.68,561 (எக்ஸ்-ஷோரூம்)
ஹோண்டா SP 125 (Honda SP 125): இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா SP 125 பைக் ஆகும். இந்த பைக் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகுந்த சக்திவாய்ந்த என்ஜினுடன், அதிக மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹோண்டா SP 125 மூன்று வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
- என்ஜின் - 123.9 cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின்
- பவர் - 10.7 bhp
- டார்க் - 10.9 NM
- மைலேஜ் - 65 kmpl
- விலை - ரூ.87,383 முதல் ரூ.91,498 (எக்ஸ்-ஷோரூம்)
ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100): ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவின் 'ஷைன் 100' மாடல் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பைக் 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
- என்ஜின் - 98.98 cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின்
- பவர் - 7.28 bhp
- டார்க் - 8.05 NM
- மைலேஜ் - 68 kmpl
- விலை - ரூ.65,143 (எக்ஸ்-ஷோரூம்)
TVS ஸ்போர்ட் (TVS Sport): பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது பைக் TVS ஸ்போர்ட் ஆகும். TVS மோட்டார்ஸ் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் இந்த பைக்கை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், தொடர்ந்து பல்வேறு மேம்படுத்தல்களை வழங்கி தற்போதும் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- என்ஜின் - 109.7 cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின்
- பவர் - 8.18 bhp
- டார்க் - 8.7 NM
- மைலேஜ் - 70 kmpl
- விலை - ரூ.64,173 முதல் ரூ.69,981 (எக்ஸ்-ஷோரூம்)
பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100): உள்நாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவால் விற்பனை செய்யப்படும் இந்த பஜாஜ் பிளாட்டினா 100 பைக், இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக், இன்றளவும் மைலேஜ் பைக் விரும்பிகளின் முதல் தேர்வாக உள்ளது.
- என்ஜின் - 102 cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின்
- பவர் - 7.79 bhp
- டார்க் - 8.34 NM
- மைலேஜ் - 72 kmpl
- விலை - ரூ.66,837 (எக்ஸ்-ஷோரூம்)
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கெத்தா சொல்லுங்க இது நம்ம தமிழக தயாரிப்பு.. SVM Prana 2.0 ஸ்பெஷல் என்ன? முழு விவரம்!