ETV Bharat / technology

கூகுள் முதல் மைக்ரோசாப்ட் வரை தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்ட திடீர் முடக்கங்கள்! - Microsoft Crowdstrike Blackout

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 7:30 AM IST

மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கத்திற்கு என்ன காரணம்? இது தான் முதல் முறையா? இதற்கு முன் எத்தனை முறை திடீர் மென்பொருள் முடக்கத்தால் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பு விளக்குகிறது.

Etv Bharat
Representational Picture (ETV Bharat/ File)

ஐதராபாத்: மைக்ரோசாப்ட் கிரவுட்ஸ்ட்ரைக் பால்கன் சென்சாரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆபீஸ் 365 உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்கள் முடங்கின. இந்த திடீர் தொழில்நுட்ப முடக்கத்தால் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் ஐடி துறைகள், வங்கிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகள் முடங்கின.

சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பால்கன் சென்சாரை மேம்படுத்திய போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனால் பயனர்களின் வீண்டோசில் Blue Screen of Death என தோன்றியது. மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பை வழங்கி வரும் கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் மென்போருளில் ஏற்பட்ட பிரச்சினை தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கிரவுட்ஸ்ட்ரைக் என்றால் என்ன?

அமெரிக்காவை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் தான் கிரவுட்ஸ்ட்ரைக். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சர்வதேச அளவிலான பெரு நிறுவனங்களிக்கு சைபர் பாதுகாப்பு வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்களுக்கு பால்கன் தொழில்நுட்பம் மூலம் சைபர் பாதுகாப்பை கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வழங்கி வருகிறது.

கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய கிரவுட்ஸ்ட்ரைக்கின் பால்கன் சென்சார் மென்பொருள் அப்டேட் செய்யப்பட்ட போது எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் முடங்கியதாக கூறப்படுகிறது.

இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. இந்த பிரச்சினை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. குறிப்பாக, விமானம், ரயில், வங்கி,பங்கு சந்தை, ஊடக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன.

2008-2023 வரை எத்தனை முறை மென்பொருள் முடக்கம் ஏற்பட்டது:

2008ஆம் ஆண்டு பேஸ்புக் முடக்கம்: கடந்த 2008ஆம் ஆண்டு மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேஸ்புக் ஒருநாள் முழுமையாக முடங்கியது. திடீர் பேஸ்புக் முடக்கத்தால் அப்போதைய பேஸ்புக்கின் 8 கோடி சந்தாதாரர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

Dyn Cyberattack 2016: ஐரோப்பியா, மற்றும் அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட மென்பொருள் முடக்கம் காரணமாக Airbnb, Amazon, BBC, CNN, eBay, Netflix, மற்றும் Twitter ஆகிய நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.

2017ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஏர்வேஸ் முடக்கம்: கடந்த 2017ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் கணினிகள் திடீரென செயலிழந்ததால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணையதளத்தை அணுக முடியாமல் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

2018ல் மைக்ரோசாப்ட் அசூர் முடக்கம்: செயலி மேம்பாடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசூர் தொழில்நுட்பம் இயங்கி வரும் நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி அசூர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மனித தவறுகளால் தென் ஆப்பிரிக்காவின் டப்ளின், அயர்லாந்து மையங்கள் சுமார் 11 மணி நேரம் முடங்கின.

2019 பேஸ்புக் முடக்கம்: 2019ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி மீண்டும் பேஸ்புக் முடங்கியதால் ஒன்றரை நாட்களாக அதன் 7 கோடியே 50 லட்சம் பயனர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

2020ல் கூகுள் முடக்கம்: கரோனா காலத்தில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் வீட்டில் இருந்து பணியாற்றிக் கொண்டு இருந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் திடீரென முடங்கியது. நிறுவனத்தின் சேமிப்பு திறன் செயல்பாட்டில் ஏற்பட்ட கோளாறு திடீர் முடக்கத்திற்கு காரணமாக கூறப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், கூகுள் ட்ரைவ், கூகுள் மீட் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் செயலிழந்தன.

2021 பேஸ்புக், வாட்ஸ் அப் முடங்கியது: இந்த முறை பேஸ்புக் மட்டுமின்றி அதன் துணை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், வாட்ஸ் அப் ஏறத்தாழ 6 மணி நேரம் முடங்கியது. இந்த திடீர் முடக்கத்தால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தன. மேலும் அப்போதைய பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ஜ் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 6 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்தன.

2021ல் அமேசான் சந்தித்த முடக்கம்: கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் வெப் சர்வீசஸ் திடீர் முடக்கத்தை எதிர்கொண்டன. சில மணி நேரங்கள் வரை நீடித்த இந்த முடக்கத்தால் நெட்பிலீக்ஸ், டிஸ்னி, ஸ்பாடிபை, தூர்தர்ஷ், வென்மோ உள்ளிட்ட பல்வேறு தளங்கள் முடங்கின. ஆட்டோமேஷன் பிழை காரணமாக இந்த திடீர் செயலிழப்பு ஏற்பட்டதாக அமேசான் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. இந்த செயலிழப்பு காரணமாக பயனர்கள் சில கிளவுட் சேவைகளை அணுகுவதையும் தடுத்தது.

2023லும் செயலிழந்த மைக்ரோசாப்ட்: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் 365 தொழில்நுட்பம் திடீரென முடங்கியது. இதனால் 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோசாப்ட் 365 பயனர்கள் பாதிப்புக்குள்ளாகினர். Outlook, OneDrive for Business, SharePoint Online, Exchange Online, மற்றும் Microsoft Graph ஆகிய மைக்ரோசாப்ட் துணை மென்பொருள்களும் முடங்கின.

இதையும் படிங்க: உலகளவில் மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்: திடீர் முடக்கத்திற்கு என்னக் காரணம்? - Microsoft Windows crowd strike

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.