ETV Bharat / technology

ஆட்டோமேட்டிக் நகராக மாறப்போகும் சீனாவின் வுஹான் நகர்.. ஆதிக்கம் பெறும் ரோபோ டாக்ஸிகள்! - CHINA ROBOTAXI CONCERN - CHINA ROBOTAXI CONCERN

Robo Taxi: தொழில்நுட்ப நிறுவனமான பைடு, சீனாவின் வுஹான் நகரில் 500 ரோபோ டாக்ஸிகளை கம்ப்யூட்டர் மூலம் இயக்கி சோதனை நடத்தி வரும் நிலையில், ரோபோ டாக்ஸிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என டாக்ஸி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Robo Taxi
Robo Taxi (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 18, 2024, 2:16 PM IST

சென்னை: தொழில்நுட்பத்தின் எழுச்சி ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள துறை ஆட்டோமொபைல் துறை என்றே சொல்லலாம். ஓட்டுநர் உள்ள ஆட்டோமேடிக் கார் முதல் தற்போது ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார் (ரோபோ டாக்ஸி) என ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது.

இந்தியாவில் ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்கள் இன்னும் வரவில்லை என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தன்னியக்க கார்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக சீனாவில் தன்னியக்க கார்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களின் வளர்ச்சியில் சீனா முன்னணியில் உள்ளது.

அமெரிக்க தொழில் அதிபர்களை முந்தியடிக்கும் நோக்கில் சீனாவின் தொழில் நிறுவனங்கள் பில்லியன் டாலர்களை ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் கொட்டி உள்ளனர். மத்திய சீனாவின் வுஹான் நகரின் பரபரப்பான தெருக்களில் ஓட்டுநர் இல்லாத கார்களின் சோதனை நடைபெற்று வருகிறது. சீன தொழில்நுட்ப நிறுவனமான பைடு, 500 ஒட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களை கம்ப்யூட்டர் மூலம் கார்கள் இயக்குகின்றன.

பைடு நிறுவனம் ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களை இயக்க கடந்த 2022ஆம் ஆண்டு உரிமம் பெற்று, முதலில் 5 தன்னியக்க கார்களை 13 சதுர கிலோ மீட்டர் வரை பயணிகளை ஏற்றி சென்றன. தற்போது சீனாவின் வுஹான் நகரில் 3 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கார்கள் இயக்கப்படுவதாக பைடு நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் கதவை திறக்க க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முன் இருக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் சாதாரண காரில் 30 நிமிட சவாரிக்கு 64 யுவான் வசூலிக்கப்படுகின்றன நிலையில், ஓட்டுநர் இல்லாத தன்னியக்க காரில் 30 நிமிடத்திற்கு 39 யுவான் (5.43 அமெரிக்க டாலர்) வசூலிக்கப்படுகிறது. அதாவது செலவும் குறைவு. இந்த கார்களில் 5ஜி உதவி தொழில்நுட்பம் மூலம் சவாரிக்கு வலுவான உத்தரவாதங்களும் வழங்கப்படுகிறது.

தொழிட்நுட்பம் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் உடன் கொண்டு சேர்கிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த போது, எல்லாரும் எப்படி மனிதனின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டதோ அதே போல இந்த தொழில்நுட்பம் மூலம் ஓட்டுநருக்கான வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என டாக்ஸி ஓட்டுநர்கள் கவலையுறுகின்றனர்.

இது தொடர்பாக சீனாவின் வுஹான் பகுதி டாக்ஸி ஓட்டுநர் டெங் ஹைபிங் கூறுகையில், “2010-களில் ரைட் - ஹெய்லிங் ஆப்ஸ் (ride-hailing apps) பயன்படுத்திய அதே உத்தியை தான் ரோபோடாக்ஸி நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. இந்த ரோபோ டாக்ஸி திட்டம் நன்றாக செயல்பட்ட பின், சவாரிக்கான விலையை உயர்த்திவிடுவார்கள். அவர்கள் எங்கள் சாப்பாட்டை திருடுகிறார்கள் (ஓட்டுநர்களை உணவிற்கு திண்டாட வைப்பதாக கூறுகிறார்).

ரோபோ டாக்ஸிகளின் தாக்கம் தற்போது பெரிதளவில் இல்லை. அவை இன்னும் முழுமையாக பிரபலமடையவில்லை. இவற்றை எல்லா இடங்களிலும் ஓட்ட முடியாது” என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: விமானமே தோற்றுப்போகும் அல்ட்ரா லக்சூரி... விஜய் வாங்கிய புதிய Lexus LM 350h காரின் ஸ்பெஷல் என்ன? - Lexus LM 350h

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.