சென்னை: இலங்கை யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIT Northern Uni), ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் இன்று கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் இன்ஸ்பேஸ் அகமதாபாத் இயக்குனர் பிரபுல்ல குமார் ஜெயின், SLIT Northern Uni தலைவர் இண்டி பத்மநாதன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார், இலங்கைக்கான தென்னிந்திய தூதரகத்தின் துணைத்தூதர் ஞானதேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன் கூறுகையில், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆன அறிவியல் ரீதியான சங்கமம் இது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் மாணவர்கள் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்பது தான் இந்த ஒப்பந்ததின் நோக்கம்.
விண்வெளிக்கு எந்த எல்லையும் கிடையாது. அதை நம் நாட்டுக்கு மட்டும் இன்றி மற்ற நாடுகளுக்கும் விரிவிக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசு கல்வித்துறை சார்பில் தேர்வு செய்து கொடுக்கப்படும் மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா விண்வெளி சார்ந்த பல்வேறு தகவல்களையும், ஒரு செயற்கை கோள்ளை ஏவும் முயற்சியிலும் இறங்கு போகிறோம்.
இதையும் படிங்க: சர்வதேச விண்வெளி வீரர்களோடு உரையாடிய பள்ளி மாணவர்கள்.. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முன்னெடுப்பு!
ஒரு முறை பயன்படுத்தும் செயற்கைக்கோளை உருவாக்குவது அதனை இஸ்ரோ மூலம் விண்வெளிக்கு அனுப்பும் செயல்பாடுகள் வரை செய்யப்படவுள்ளோம். அடுத்த ஆண்டு கடைசியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இதை ஏவ உள்ளோம். இதற்கான வகுப்புகளை இந்தியாவில் இருந்து 5 ஆசிரியர் மூலம் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கற்றுத் தரப்பட உள்ளது.
இதில் முதல் கட்டமாக இலங்கையை சேர்ந்த 50 பள்ளி மாணவர்கள், இந்தியாவை சேர்ந்த 10 பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கையை சேர்ந்த 30 கல்லூரி மாணவர்கள் நேரடியாக செயற்கைக்கோள் உருவாக்கி, ஒருங்கிணைந்து ஏவுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் தயார் செய்யப்பட்டப் பின்னர் அதனை இலங்கையில் இருக்கும் 50 அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்றார்.
இதையடுத்து இது குறித்து பேசிய SLIT Northern Uni தலைவர் இண்டி பத்மநாதன் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கையில் போரினால் மாணவர்களின் கல்வியில் ஏற்பட்ட தாக்கத்தை கலைய உதவுகிறது. மேலும் இதன் மூலம் விஞ்ஞான மற்றும் கண்டுபிடிப்பு கலாசாரத்தை வளர்க்க முடியும்.
இந்த முயற்சி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் உதவேகம் அளிக்கும். இரு நாடுகளின் வருங்கால மாணவர்கள், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து நன்கு அறிந்து கொள்வார்கள்.
மேலும் இதன் மூலம் மாணவர்களிடையே விண்வெளி, செயற்கை கோள் அறிவையும், ஆர்வத்தையும் வளர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இதன் மூலம் அறிவியல் மற்றும் பொறியியலில் மேம்பட்ட திறன்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், குழுப்பணி மற்றும் தமக்கான இலக்குகள் குறித்தும் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்