ETV Bharat / technology

இவர்கிட்ட மட்டும் தான் இது இருக்கு! முகேஷ் அம்பானி வாங்கிய விலை உயர்ந்த போயிங் விமானம்! - Mukesh Ambani new Private Jet - MUKESH AMBANI NEW PRIVATE JET

Mukesh Ambani Private Jet: உலகப் பணக்காரர்களின் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி விலை உயர்ந்த புதிய போயிங் ஜெட் விமானத்தை வாங்கி உலகைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.

reliance industries mukesh ambani new boeing 737 max 9 private jet cost and specifications article thumbnail
முகேஷ் அம்பானி வாங்கிய விலை உயர்ந்த போயிங் விமானம். (Credits: ETV Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 21, 2024, 1:56 PM IST

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 11-ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் இவர் தற்போது விலை உயர்ந்த போயிங் 737 மேக்ஸ் 9 (Boeing 737 MAX 9) எனும் தனியார் விமானத்தை வாங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் இதுவரை யாரும் இந்த தனியார் விமானத்தை சொந்தமாக வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை யாரும் அரங்கேற்றாத வகையில் ஆடம்பரத் திருமணத்தை தன் மகனுக்கு சமீபத்தில் செய்துவைத்து செய்திகளில் தொடர்ந்து வலம்வந்த இவர், தற்போது வாங்கியிருக்கும் தனது விலை உயர்ந்த 10-ஆவது தனியார் ஜெட் விமானத்தால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அந்தவகையில், அவர் வாங்கியிருக்கும் போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தை குறித்து இணையவாசிகள் தேடி வருகின்றனர். எனவே அதன் முழு விவரங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் சிறப்பம்சங்கள் (Boeing 737 Max 9 specifications):

boeing 737 max 9
வானில் பறக்கும் போயிங் 737 மேக்ஸ் 9 புகைப்படம். (Credits: Boeing)
  • போயிங் 737 மேக்ஸ் 9 உலகின் மிக விலை உயர்ந்த ஜெட் விமானங்களில் ஒன்றாகும்.
  • இது CFM International நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு LEAP-1B என்ஜின்களால் இயக்கப்படுகிறது.
  • இதன் MSN எண் 8401 ஆகும்.
  • இதனால் சிங்கிள் டேக்கில் 3,300 நாட்டிகல் மைல், அதாவது 6,110 கிலோமீட்டர்கள் பறக்க முடியும்.
  • அதிகமாக இதில் 220 இருக்கைகளைப் பொருத்தலாம்.
  • இதன் நீளம் 138 அடி 4 அங்குலமாக (138 ft 4 in) உள்ளது.
  • இறக்கையின் நீளம் (Wingspan) 117 அடி 10 அங்குலம் (117 ft 10 in) ஆகும்.

போயிங் 737 மேக்ஸ் 9 விலை என்ன?

போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் அடிப்படை விலை 118.5 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.987 கோடி இருக்கும். இதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கேபின் மாற்றங்கள், உள்புற அமைப்பின் வேலைப்பாடுகள் செலவு, விமானத்தின் விலையை மேலும் உயர்த்தும் என்று கூறப்படுகிறது. பெரிய கேபின், பொருள்கள் வைப்பதற்கு பெரிய இடவசதி என அம்பானி குடும்பம் பயணம் செய்வதற்காக மறுசீரமைக்கப்பட்ட உள்புற கட்டமைப்பைச் சேர்த்து, இந்த தனியார் விமானத்தின் விலை ரூ.1,000 கோடியைத் தாண்டும் என செய்தி வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க:

  1. அஜித்குமாரின் புதிய போர்ஷ் கார்; ஷாலினி இன்ஸ்டா பதிவு... இந்த கார இவரும் வெச்சிருக்கார்? - ajithkumar buys porsche 911 GT3
  2. இப்படி ஒரு படகை வாங்கணும்: அசரடிக்கும் திறனுடன் கேண்டேலா சி-8 மின்சாரப் படகு உலக சாதனை! - Candela C 8 electric speedboat

சுவிட்சர்லாந்து டூ இந்தியா:

boeing 737 max 9
டேக் ஆஃப் ஆகும் போயிங் 737 மேக்ஸ் 9 தனியார் விமானத்தின் புகைப்படம். (Credits: Boeing)
  • சுவிட்சர்லாந்தில் உள்ள EuroAirport Basel-Mulhouse-Freiburg தளத்தில் வைத்து இதன் உள்கட்டமைப்புகள் மெருகேற்றப்பட்டன.
  • இந்த தனியார் ஜெட் விமானம் பாசல் (Basel), ஜெனீவா, லண்டன் மற்றும் லூட்டன் விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டது.
  • அனைத்து சோதனைகள் மற்றும் மேம்படுத்தல்கள் முடிந்த பிறகு, இது இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
  • இது ஆகஸ்ட் 27, 2024 அன்று பாசலில் இருந்து கிளம்பி டெல்லி வந்தடைந்தது.

விரைவில் இந்த விமானம் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனுடன் சேர்த்து 10 தனியார் விமானங்களுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இதில் ஹெலிக்காப்டர்களும் அடங்கும். இந்த தொகுப்பில் பாம்பார்டியர் குளோபல் 6000, இரண்டு டசால்ட் பால்கன் 900, எம்ப்ரேயர் ERJ-135 ஆகிய விமானங்கள் உள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த கூடுதல் செய்திகளுக்கு ஈடிவி பாரத் டெக் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ஈடிவி பாரத் செயலியை இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். தயவுசெய்து செயலியைப் பதிவிறக்கி எங்களுடன் உங்கள் கருத்தைப் பகிரவும்.

உங்கள் வாட்ஸ்அப்பில் தினசரி செய்திகள் அறிந்து உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் - ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.