ஒப்போ நிறுவனம் சைலண்டாக ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் 6s ஜென் 1 சிப்செட், 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், வேகமான 45W சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களுடன் புதிய ஒப்போ A3x (Oppo A3x) 4ஜி போனை அறிமுகம் செய்தது. நெபுலா ரெட், ஓஷியன் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
இரண்டு வேரியண்டுகளில் வரும் ஒப்போ A3x 4ஜி போனின் விலையை பொருத்தவரை, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.8,999 ஆகவும், 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.9,999 என்ற விலையிலும் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. அக்டோபர் 29 ஆம் தேதி முதல் ஆன்லைன் ஸ்டோர்களில் பட்டியலிடப்படும் இந்த ஸ்மார்ட்போனின் இப்போதையை விலை, விழாகால சலுகைகளை உள்ளடக்கியது என ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்போ A3x 4ஜி அம்சங்கள்
- 6.67 அங்குல எல்சிடி திரை (inch LCD Display)
- ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 14 (ColorOS 14)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 1 சிப்செட்
- 4ஜி நெட்வொர்க்
- LPDDR4X ரேம்
- பின்பக்கம் ஒரு ஃபிளிக்கர் சென்சாருடன் வரும் 8 மெகாபிக்சல் கேமரா
- முன்பக்கம் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 128ஜிபி வரை eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 5,100mAh பேட்டரி
- 45W வேகமான சார்ஜிங் ஆதரவு
- 165.77x76.08x7.68 மில்லிமீட்டர் அளவு
- 186 கிராம் எடை