ETV Bharat / technology

சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன்: 128ஜிபி விலைக்கு 256ஜிபி வேரியன்ட்; அறிமுக சலுகையை மிஸ் பண்ணீராதீங்க! - Samsung Galaxy S24 FE Launch Offer - SAMSUNG GALAXY S24 FE LAUNCH OFFER

Samsung Galaxy S24 FE: சாம்சங் நிறுவனம் தங்களின் பிரீமியம் தொகுப்பில் புதிய சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் மொபைலை எக்சினாஸ் சிப்செட் உடன் கொண்டுவந்துள்ளது.

Galaxy S24 Fe mobile launch article images
சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் சலுகைகளுடன் அறிமுகம். (Samsung India)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 28, 2024, 1:57 PM IST

முன்னணி டெக் நிறுவனமான சாம்சங், புதிய சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் (Samsung Galaxy S24 FE) மொபைலை அறிமுகம் செய்தது. எப்போதும், தங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத பயனர்களுக்காக சற்று குறைந்த விலையில் ஃபேன்ஸ் எடிஷன் மொபைல்களை சாம்சங் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்தவகையில், தற்போது வெளியான சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் மொபைலில் 4,700 mAh பேட்டரி, எக்சினாஸ் 2400இ சிப்செட் (Exynos 2400e Soc), 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, கேலக்சி ஏஐ (Galaxy AI) போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் தேதி, விலை போன்ற கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்சி எஸ்24 Vs எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன்:

பிரீமியம் கேலக்சி மொபைல்களில் கிடைக்கும் பெரும்பாலான அம்சங்கள் அனைத்தும் இந்த போனில் பயனர்களுக்குக் கிடைக்கும். அதன்படி, இரண்டிற்குமான வித்தியாசங்களை பயனர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

Galaxy S24 Fe mobile launch article images
சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் நிறங்கள். (Samsung India)
  1. நீலம், கிராஃபைட், மின்ட்ஆகிய மூன்று நிறங்களில் மட்டுமே எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
  2. 6.1-அங்குல திரை (inch display) அளவிற்கு மாற்றாக புதிய ஃபேன்ஸ் எடிஷனில் 6.7-அங்குல திரை கொடுக்கப்பட்டுள்ளது.
  3. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 திரை பாதுகாப்பிற்கு பதிலாக விக்டஸ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது.
  4. முதன்மை கேமராவில் வரும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸுக்குப் பதிலாக 8 மெகாபிக்சல் உள்ளது.
  5. சாம்சங் எக்சினாஸ் 2400 சிப்செட்டுக்கு பதிலாக 2400இ இணைக்கப்பட்டுள்ளது.
  6. 4,000 mAh பேட்டரிக்கு பதிலாக 4,700 mAh திறன்கொண்ட பேட்டரி சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷனில் உள்ளது.

சாம்சங் கேலக்சி எஸ்24 பேன்ஸ் எடிஷன் விலை:

இந்த போனை சாம்சங் நிறுவனம் அக்டோபர் 3 முதல் விற்பனைக்குக் கொண்டுவருகிறது. தற்போது முதல் இந்த 5ஜி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துகொள்ளலாம். முக்கியமாக, 128 ஜிபி வகை விலையிலேயே, 256 ஜிபி வகையை வாங்கலாம் என நிறுவனம் அறிமுக சலுகையை அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. முன்பதிவின் கடைசி பக்கததில் இந்த சலுகையை உங்களுக்காக வைத்துள்ளது சாம்சங்.

முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.4,799 மதிப்பிலான Samsung Care+ ரூ.999 என்ற விலையில் கிடைக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் தளம், அருகில் உள்ள கடைகள் மற்றும் பிற ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து சாம்சங் கேலக்சி எஸ்24 பேன்ஸ் எடிஷன் வாங்கலாம். கட்டணமில்லா மாதத் தவணை வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் மொபைல் போன். (Samsung India)

சாம்சங் கேலக்சி எஸ்24

பேன்ஸ் எடிஷன்

விலை
8 ஜிபி / 128 ஜிபிரூ.59,999
8 ஜிபி / 256 ஜிபிரூ.65,999

சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் அம்சங்கள்:

சாம்சங் கேலக்சி எஸ்24 போனைப் போன்றே, ஃபேன்ஸ் எடிஷனிலும் கேலக்சி ஏஐ அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் உதவியுடன் நேரடியாக பயன்படும் மொழிபெயர்ப்பு, முக்கியமானதை தேடும்போது அதனைக் குறித்து எளிதில் குறிப்பு எடுக்கும் வசதி, சர்கிள் டூ சர்ச் போன்ற பல AI சேவைகளைப் பயன்படுத்தலாம்.

சாம்சங் கேலக்சி எஸ்24 உடன் எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் ஒப்பீடு. (Samsung India)
  • 6.7-அங்குல முழு எச்டி+ (1,080 x 2,340 பிக்சல்கள்) டைனமிக் அமோலெட் 2x டிஸ்ப்ளே
  • 120 Hz ரெப்ரெஷ் ரேட்
  • கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு
  • 4 nm சாம்சங் டெக்கா-கோர் எக்சினாஸ் 2400e சிப்செட்
  • பின்பக்க கேமரா: 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் OIS உடன், 8 மெகாபிக்சல் 3x டெலிஃபோட்டோ சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ்
  • செல்ஃபி: திரையின் பஞ்ச் ஹோலில் 10 மெகாபிக்சல் கேமரா
  • 8 ஜிபி ரேம் / 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ப்ளூடூத் 5.3, வைஃபை 6இ இணைப்பு வசதிகள்
  • அளவு (மில்லிமீட்டர்): 162.0 x 77.3 x 8.0
  • 213 கிராம் எடை

சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷனை சலுகை விலையில் சில தினங்களுக்கு மட்டுமே பெறமுடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

  1. சோனி கேமராவுடன் வரும் விவோ V40e: சினிமா தர வீடியோ, பெரிய பேட்டரி உடன் பல அம்சங்கள்!
  2. ஜீரோ 40 5ஜி: ஐபோன் iOS 18-க்கு போட்டி நாங்கதான்; IR ரிமோட், JBL ஸ்பீக்கர்ஸ், Folax அசிஸ்டன்ட் என பல அம்சங்கள்!
  3. செயலிழந்த ஜிமெயில் அக்கவுண்ட்: உடனடியா இத பண்ணா; உங்க கூகுள் கணக்க காப்பாத்தலாம்!
etb bharat tamil nadu whatsapp channel link
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய (ETV Bharat)

இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.