டெல்லி : விண்டோஸ் மற்றும் சர்பேஸ் டீம்ஸ் (Surface teams) நிறுவனங்களை ஒன்றிணைத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கு இந்தியாவை சேர்ந்த சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் பவன் தவ்லுரி என்பவரை தலைவராக நியமித்து உள்ளது. மேலும் இந்த இணைப்பின் மூலம் விண்டோஸ் நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஏஐ நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக பவன் தவ்லுரி மைக்ரோசாப்ர் ஹார்ட்வேர் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக பணியாற்றிய நிலையில், தற்போது விண்டோஸ் இன்ஜினியரிங் பிரிவையும் ஒன்றிணைத்து இரண்டு நிறுவனங்களுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக விண்டோஸ் தலைவராக இருந்த பனோஸ் பனாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்பு இரண்டு பிரிக்கப்பட்டு பவன் தவ்லுரி மற்றும் மிக்கெய்ல் பராகின் ஆகியோரிடையே வழங்கப்பட்டது. இந்நிலையில், வெப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏனைய நிறுவனங்களான Bing, Edge மற்றும் Copilot நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் மைக்ரோசாப்ட்டின் விளம்பரப் பிரிவின் பொறுப்புகள் மிக்கெய்ல் பராகினுக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே மைக்ரோசாப்ட் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக டீப் மைண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் முஸ்தபா சுலேய்மான் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மறுசீரமைப்பு மூலம் பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டு விண்டோஸ் மற்றும் சர்பேஸ் டீம்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்து அதன் தலைவராக பவன் தவ்லுரி நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏஐ தொழில்நுட்ப கணினிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேட் நிறுவனங்களை ஒன்றிணைத்து பணிகளை விரைவுபடுத்த திட்டமிட்டு உள்ள்தாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : விக்ரம் லேண்டார்: மோடி வைத்த சிவசக்தி பெயருக்கு அங்கீகாரம் - சர்வதேச வானியல் ஒன்றியம் உத்தரவு! - Statio Shiv Shakti