டெல்லி: உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயலிழந்ததை அடுத்து மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளும் செயலிழந்ததால் தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் காரணமாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் Blue screen of Death Error எனக் குறிப்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே முடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு சென்சார் பதிப்புகளில் Windows கணினிகளில் Blue screen of Death Error ஏற்படுத்தும் பரவலான சிக்கலை தீர்க்க போதிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "கடவுள் என்னை காப்பாற்றினார்.." துப்பாக்கிச் சூடுக்கு பின் டிரம்ப் முதல் முறை தேர்தல் பிரசாரம்! - US president Election Donald Trump