ETV Bharat / technology

ஓரியன் AR ஸ்மார்ட் கண்ணாடி: புதிய உலகை கண்முன் கொண்டு வந்த மெட்டா! - Orion Augmented Reality Glasses - ORION AUGMENTED REALITY GLASSES

மெட்டா (Meta) தனது புதிய ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) கண்ணாடியான ‘ஓரியன்’ (Orion)-யை அறிமுகம் செய்து, புதிய பரிணாமத் தொழில்நுட்பத்தின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.

orion augmented reality glasses invented by meta
ஓரியன் AR ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்த மெட்டா. (Meta)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 2, 2024, 4:18 PM IST

ஹைதராபாத்: பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளப் பயன்பாடுகளை நிர்வகிக்கும் டெக் நிறுவனமான ‘மெட்டா’, ஐந்தாண்டுகளுக்கு முன் தங்களின் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. தகவல் உலகத்தையும், சுற்றியுள்ள இயற்பியல் உலகையும் ஒரு கண்ணாடியில் இணைக்கும் மெட்டாவின் கனவு திட்டம், தற்போது புதிய நிலையை அடைந்துள்ளது. அதன் விளைவாக, நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஓரியன்’ (Orion) ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) கண்ணாடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை உருவாக்கப்பட்ட ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) கண்ணாடிகளில் இது சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும் இருக்கிறது என மெட்டா இதன் அறிமுக நிகழ்வில் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் மக்களை இணைக்க இது ஒரு பாலமாக இருக்கும் எனவும் மெட்டா நம்பிக்கை வைத்திருக்கிறது. தற்போது, இந்த கண்ணாடியைக் குறித்து பார்க்கும்முன், ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகிய இரண்டுக்குமான வித்தியாசங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

ஆக்மென்டட் ரியாலிட்டி / விர்ச்சுவல் ரியாலிட்டி இரண்டிற்குமான வேற்றுமை என்ன?

ஒரு கண்ணாடி உங்களை மாய உலகிற்கு அழைத்துச் செல்லும் என்றால், அது மெய்நிகர் தொழில்நுட்பம் எனப்படும் விரிச்சுவல் ரியாலிட்டியால் சாத்தியமாகும். இதுவே, நாம் பார்ப்பதில் புதிய டிஜிட்டல் லேயர்கள், அதாவது அடுக்குகளை இணைத்தால், அதை ஆக்மென்டட் ரியாலிட்டி எனக் குறிப்பிடுகிறோம். உங்களுக்கு இதை சற்று எளிதாக சொன்னால், புரியும் என்று நினைக்கிறேன்.

ஆக்மென்டட் ரியாலிட்டி: எடுத்துக்காட்டாக, இங்கு நீங்கள் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR அல்லது ஏஆர்) கண்ணாடியை அணிந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தொலைவில் அல்லது வெளிநாட்டில் இருக்கும் நண்பருடன் உங்களுக்கு செஸ் விளையாட வேண்டும் என்று தோன்றுகிறது. அவரிடமும் ஏஆர் கண்ணாடி உள்ளது. இதை வைத்து, உங்கள் கண்முன் இருக்கும் எதோ ஒரு டேபிளில் செஸ் போர்டை கொண்டு வர முடியும். அதில் உங்கள் நண்பரையும் இணைத்து மெய்யான உலகில் செஸ் விளையாடுவது போன்ற அனுபவத்துடன் அதை விளையாட முடியும்.

மெய்நிகர் தொழில்நுட்பம் (VR - Virtual Reality):

நிகழ்காலத்தில் இருந்து நம்மை இன்னொரு மாயை உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் மெய்நிகர் தொழில்நுட்பம். எடுத்துக்காட்டாக, மெய்நிகர் கண்ணாடிகளை அணிந்துகொண்டு விளையாடினாலோ அல்லது 3டி படங்களைப் பார்த்தாலோ, 360 டிகிரி காட்சித் தரத்துடன் அதனைக் கண்டு களிக்கலாம். முக்கியமாக, அந்த இடத்திலேயே நீங்கள் இருப்பதைப் போன்று உங்களால் உணர முடியும். சமூக வலைத்தளங்களில் வலம் வரும் சில காணொளிகளைக் கூட பார்த்திருப்பீர்கள். விஆர் கண்ணாடியை அணிந்துகொண்டு, பார்வையாளர்கள் அலறுவது, பயப்படுவது போன்ற பல காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.

இதையும் படிங்க
  1. 71 நாள் புதைந்திருந்த அர்ஜூனின் உடல்; கண்டுபிடிக்க உதவிய புதிய ட்ரோன் தொழில்நுட்பம்!
  2. இவர்கிட்ட மட்டும் தான் இது இருக்கு! முகேஷ் அம்பானி வாங்கிய விலை உயர்ந்த போயிங் விமானம்!
  3. சாம்சங் கேலக்சி எஸ்24 FE: 128ஜிபி விலைக்கு 256ஜிபி வேரியன்ட்; அறிமுக சலுகையை மிஸ் பண்ணீராதீங்க!

ஓரியன் ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகள் அவசியம் என்ன?

ஏஆர் கண்ணாடிகள் வாயிலாக தொழில்நுட்பத்தை விரைவாக மனிதர்கள் மேம்படுத்த முடியும் என மெட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது.

orion augmented reality glasses invented by meta
மெட்டா ஓரியன் ஏஆர் கண்ணாடியுடன் நிறுவனத்தின் பிற ஏஆர், விஐ கேட்ஜெட்டுகள். (Meta)
  1. விரிவான டிஜிட்டல் அனுபவங்கள்: ஸ்மார்ட்போன் திரைக்கு மாறாக, ஏஆர் கண்ணாடிகள் வாயிலாக நாம் 2டி அல்லது 3டி திரையை கண்முன்னே கொண்டுவரலாம். உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், இதை நாம் பயன்படுத்த முடியும்.
  2. AI உடன் இணைப்பு: ஓரியன் கண்ணாடிகள் உங்கள் சுற்றுப்புறத்தை உணர்ந்து, உங்கள் தேவைகளை முன்னறிவிக்க செயற்கை நுண்ணறிவுடன் ஒத்திசைந்து வேலை செய்கிறது.
  3. எளிதாக அணியக்கூடிய வடிவம்: ஓரியன் கண்ணாடிகள் மிகவும் இலகுவானவை. எந்த சூழலிலும் அணிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

ஸ்மார்ட் கண்ணாடிகளின் முன்னேற்றம்:

ரே-பான் மெட்டா கண்ணாடிகள் (Ray-Ban Meta Glasses) மனிதர்களை ஸ்மார்ட்போன் இல்லாமல் டிஜிட்டல் உலகுடன் தொடர்புகொள்வதை எளிதாக்கியது. அதன் அடுத்தப் பரிணாமமாக, ஓரியன் ஏஆர் கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து, நிகழ்காலத்தில் பேரின்ப அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்குகிறது.

அடுத்தடுத்த டெக்னாலஜி வளர்ச்சி:

நவீன VR மற்றும் மிக்சட் ரியாலிட்டி எனப்படும் MR டெக்னாலஜியில் இருக்கும் ஹெட்செட்டுகளை, இலகுவான கண்ணாடி வடிவில் சுருக்கி, ஓரியன் கண்ணாடிகளை உருவாக்கி இருக்கிறது மெட்டா நிறுவனம். இதில் நீங்கள் டிஜிட்டல் உலகையும், நிஜ உலகையும் ஒரே நேரத்தில் கையாள முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவரை அழைக்க வேண்டும் என்றாலும் இந்த கண்ணாடி வழியாக அழைக்கலாம், அல்லது உங்கள் முன் இருக்கும் நபரைப் பார்த்து நிகழ்நேரத்தில் உரையாட வேண்டும் என்றாலும், இந்த கண்ணாடி அதற்காக அம்சங்களை வழங்குகிறது.

அதிரடியான AR அனுபவங்கள்:

உங்கள் மொபைலை இனி கையில் எடுக்கத் தேவையில்லை. மெட்டா AI உதவியுடன் நீங்கள் உங்கள் நிகழ்கால திட்டங்களை ‘ஓரியன்’ கண்ணாடி வழியாகவே நிர்வகிக்க முடியும். மேலும், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் வாயிலாகச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அடுத்தகட்ட முன்னேற்றம்:

ஓரியன்’ தற்போது சோதனை முயற்சியில் இருப்பதால், மக்கள் பயன்பாட்டுக்கு இது கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும் என மெட்டா தெரிவித்துள்ளது. ஆனால் அப்போது இருக்கும் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து இந்த கண்ணாடி வெளியாகும்போது, அதன் அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதே டெக் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

etv bharat tamil nadu whatsapp channel link
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.