ஐதராபாத்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பொருத்தப்படும் பிஎஸ்4 என்ஜினை நீண்ட நேரம் இயக்கி புது மைல்கல் படைத்துள்ளது. ஏறத்தாழ 665 விநாடிகள் பிஎஸ்4 ராக்கெட் இயக்கப்பட்டு அதிக வெப்ப திறன் சக்தி சோதித்து பார்க்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெப்ப திறன்களை தாங்கி நீண்ட நேரம் செயல்படக் கூடிய அடிடீவ் உற்பத்தி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த பிஎஸ்4 என்ஜின் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மேல் தளத்தில் பொருத்தப்படும் இந்த என்ஜின் விண்வெளியில் செயற்கைகோள் சீரான வேகத்தில் செல்லவும், ஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஊந்துசக்தி மூலம் மேல் நோக்கி கொண்டு செல்லவும் இந்த என்ஜின் பயன்படுவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள திரவ உந்து அமைப்பு மையம் சீரான இடைவெளியில் ராக்கெட் பயணிப்பதற்கு உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள லேசர் பவர் பெட் பியூசன் தொழில்நுட்பம் 14 சிறிய பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும் 13.7 கிலோ உலோக பவுடர் கொண்டு இயக்கப்படுவதால் மற்ற என்ஜின்களை காட்டிலும் ஒட்டுமொத்தமாக 60 சதவத உற்பத்தி நேரச் செலவு குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விப்ரோ 3டி நிறுவனம் இதற்காக என்ஜினை வடிவமைத்த நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றதாகவும் அப்போது 665 விநாடிகள் பிஎஸ்4 என்ஜின் இயங்கி அதன் முழு செயல் திறனை வெளிப்படுத்தியதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறையில் இருந்து வெளியே வந்ததும் கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசியது என்ன? - Bail To ARVIND KEJRIWAL