ETV Bharat / technology

முதல் ஹாலோ சுற்றுவட்டபாதையை நிறைவு செய்த ஆதித்யா எல்1- இதுவரை கொடுத்த தகவல்கள் என்னென்ன? - ISRO Aditya L1 - ISRO ADITYA L1

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Etv Bharat
ISRO's Aditya-L1 (ANI photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 1:36 PM IST

டெல்லி: சூரியனை ஆய்வு செய்ய கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

படிப்படியாக சுற்றுவட்ட பாதைகளை கடந்த ஆதித்ய எல் 1 விண்கலம் சூரியன் குறித்து அவ்வப்போது தவல்களை பூமிக்கு அனுப்பி வைந்தது. இந்நிலையில், பூமியில் இருந்து ஏறத்தாழ 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் கடந்த ஜனவரி மாதம் நிலைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கடந்த மே மாதம் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பியது. இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம் 178 நாட்கள் பயணித்து லாக்ராஞ்சியன் புள்ளி 1ல் தனது ஒளிவட்ட பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளதாகவும் தற்போது விண்கலம் இரண்டாவது ஹாலோ ஆர்பிட்டில் தனது பாதையை வெற்றிகரமாக மாற்றி சிறப்பாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஒரு சுற்று பயணத்திலேயே ஏராளமான தகவல்களை ஆதித்யா எல்1 விண்கலம் சேகரித்து வழங்கி உள்ள நிலையில் அடுத்தடுத்த சுற்றுகளில் மேலும் அதிகமான தகவல்களை ஆதித்யா சேகரித்து தரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றியின் மூலம் சூரியனை ஆய்வு செய்யும் சர்வதேச நாடுகளின் தரத்திற்கு இந்தியா உயர்ந்திருக்கிறது.

இதையும் படிங்க: "ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கும் 6வது நாடு இந்தியா"- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்! - Deep Sea Mission

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.