ETV Bharat / technology

ஜீரோ 40 5ஜி: ஐபோன் iOS 18-க்கு போட்டி நாங்கதான்; IR ரிமோட், JBL ஸ்பீக்கர்ஸ், Folax அசிஸ்டன்ட் என பல அம்சங்கள்! - Infinix Zero 40 5G AI Phone - INFINIX ZERO 40 5G AI PHONE

Infinix Zero 40 5G: ஆப்பிள் ஐபோன்களின் புதிய அப்டேட்டான ஐஓஎஸ் 18 (iOS 18) இயங்குதளத்தில் இருக்கும் பல அம்சங்களை இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனில் அந்நிறுவனம் சேர்த்துள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் மொபைல் விற்பனை செப்டம்பர் 21-ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் தொடங்குகிறது.

Infinix Zero 40 5G AI phone
பல AI அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன் அறிமுகம் (Infinix)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 18, 2024, 2:00 PM IST

இன்பினிக்ஸ் நிறுவனம் தங்களின் புதிய ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘MADE FOR ACTION’ என்ற முழக்கத்துடன் வெளியிடப்பட்ட இன்பினிக்ஸ் போனில், பல மேம்பட்ட அம்சங்களை நிறுவனம் சேர்த்துள்ளது. குறிப்பாக கோ ப்ரோ (GoPro) நிறுவனத்துடன் இணைந்து அவர்களது கேமராவை எளிதாக இணைத்து படம்பிடிக்கும் அம்சத்தினை நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல், IR ரிமோட், JBL ஸ்பீக்கர்ஸ், Folax அசிஸ்டன்ட், இன்பினிக்ஸ் AI என பல அம்சங்களை நிறுவனம், ஐபோன் ஐஓஎஸ் 18 (iOS 18) உடன் போட்டியிடும் அளவிற்கு இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனில் சேர்த்துள்ளது. புதிய இன்பினிக்ஸ் மொபைலை வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். வங்கி சலுகைகள் உள்பட இதன் அடிப்படை மாடலின் விலை ரூ.24,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி AI கேமரா:

பின்பக்க கேமரா: 108 மெகாபிக்சல் OIS சென்சாருடன், 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், ஒரு Bokeh கேமரா, இரண்டு பிளாஷ்லைட்டுகள் கொண்டிருக்கிறது. 50 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL JN1 சென்சார், டூயல் எல்இடி பிளாஷ், 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் அடங்கிய செல்பி கேமரா முன்பக்க டிஸ்ப்ளே நாட்சில் நிறுவப்பட்டுள்ளது.

Infinix Zero 40 5G AI camera features
இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி AI கேமரா அம்சங்கள் (Infinix)

இதனுடன் இணைக்கப்பட்ட அம்சங்கள் கீழ்வருமாறு:

  1. எடுக்கும் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பாகங்களை நீக்கும் AI எரேசர்.
  2. வீடியோக்களை தொகுக்க AI அம்சங்கள்.
  3. கேலரியில் உள்ள புகைப்படங்களின் கூடுதல் விவரங்களை AI உதவியுடன் தெரிந்துகொள்ளலாம்.
  4. AI Cutout உதவியுடன் புகைப்படங்களில் இருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கலாம்.

இதையும் படிங்க: ஜிபிஎஸ் முதல் AI வரை: கால்பந்து அனுபவத்தை வேற லெவலாக்கும் புதுமையான டெக்னாலஜிகள்!

Folax அசிஸ்டன்ட்:

ஆப்பிள் சிரி, கூகுள் அசிஸ்டன்ட் போன்று ஃபோலாக்ஸ் உதவியாளரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக வேகமாக அழைப்புகளை மேற்கொள்ளமுடியும். மேலும், இந்த பயன்பாடு மெசேஜஸ், நோட்ஸ், பிரவுசர் போன்ற செயலிகளுடன் இசைந்து செயல்படும்.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி அம்சங்கள் (Infinix Zero 40 5G Specifications):

Infinix Zero 40 5G AI phone
இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன் (Infinix)
  • 6.74-அங்குல வளைந்த 3டி அமோலெட் டிஸ்ப்ளே, 144 Hz ரெப்ரெஷ் ரேட், 1,300 பீக் பிரைட்னஸ் உடன் களம் கண்டுள்ளது.
  • மீடியாடெக் டிமென்சிட்டி 8200 அல்டிமேட் 3.1 Ghz 4 nm சிப்செட் இந்த இன்பினிக்ஸ் மொபைலில் நிறுவப்பட்டுள்ளது.
  • மாலி-G610 MC6 கிராபிக்ஸ்
  • ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான XOS 14.5 இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனை இயக்குகிறது.
  • 12ஜிபி LPDDR4X ரேம் உடன் 256ஜிபி அல்லது 512ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் தேர்வு செய்யும் இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வருகிறது
  • யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, JBL டியூனிங் உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
  • 5,000 mAh பேட்டரியை ஊக்குவிக்க 45W சார்ஜிங், 20W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகிய ஆதரவுகள் கிடைக்கும்.
  • போனின் அளவு (மில்லிமீட்டரில்): 164.30 (நீளம்) x 74.50 (அகலம்) ×7.9 (தடிமன்)

இதையும் படிங்க: சிறந்த 5ஜி போன்கள்: ரூ.11,000 இருந்தா போதும்... சூப்பர் ஸ்மார்ட்போன் வாங்கலாம்!

இதனுடன் தூசி மற்றும் சிறு நீர்துளிகளிடம் இருந்து ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க ஐபி54 தரக்குறியீடு வழங்கப்படுகிறது. மேலும் NFC, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைஃபை 6E, புளூடூத் 5.2 போன்ற இணைப்பு ஆதரவுகளும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி விலை (Infinix Zero 40 5G price in India):

WGSN உடன் இணைந்து உருவாக்கப்பட்ட Infinix Zero 40 5G ஸ்மார்ட்போன் ஆனது வயலட் கார்டன், மூவிங் டைட்டானியம், ராக் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலுக்கான அசல் விலை ரூ.27,999 ஆகவும், 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.30,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனை, செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 7 மணி முதல் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி ரூ.3,000 கேஷ்பேக் பெறலாம். அதன்படி, அடிப்படை மாடல் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி மொபைலை ரூ.24,999 என்ற விலைக்கும், 512ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.27,999 என்ற விலைக்கும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.