ஐதராபாத் : தற்போதைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் புதிதாக சிம் கார்டு வாங்குவது வரை பலதரப்பட்ட பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. அதேநேரம் ஆதார் கார்டு மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
வங்கிக் கணக்கு தொடங்கும் போது, புதிதாக சிம் கார்டு அல்லது வேறெதும் பணிகளுக்கு ஆதார் கார்டு நகல்களை வழங்கும் போது அதை அடையாளம் தெரியாத நபர்கள் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனரா என்பதை அறிந்து கொள்ள முடியாமல் மக்கள் திணறுகின்றனர்.
மேலும், வங்கிக் கணக்குகளில் இருந்து ஆதார் எண் கொண்டு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்கிற வசதி அறிமுகமாகி உள்ள நிலையில், பயனர்கள் நிச்சயம் தங்களது ஆதார் கார்டு குறித்த முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட தரவுகளை தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
அப்படி தெரிந்து கொள்வதன் மூலம் நமது ஆதார் எண் எந்தெந்த பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் நமக்கு தெரியாத நபரால் நமது ஆதார் எண் வேறெதும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படி ஆதார் எண்ணின் முந்தைய தரவுகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதை இந்த செய்தியில் காணலாம்.
1. https://uidai.gov.in/en/ portal என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Udai) தளத்திற்கு செல்ல வேண்டும்.
2. அதில் Aadhaar services என்பதில் மேலே இடது புறம் உள்ள My Aadhaar என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. அதில் கீழே கொடுக்கப்பட்டு உள்ள Aadhaar Authentication History என்பதை தேர்வு செய்தால் புதிதாக ஒரு பக்கம் உருவாகம்.
4. அதில் உள்ள Login பகுதியில் ஆதார் எண் மற்றும் Captcha குறியீட்டை கொடுத்தால் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டு உள்ள செல்போன் எண்ணுக்கு ஒரு முறை ரகசிய குறியீடு வரும். அதை கொண்டு Login செய்ய வேண்டும்.
5. புதிதாக ஒரு பக்கம் உருவானதும் அதில் authentication history என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
6. அதில் Select ALL மற்றும் தேதி வாரியாக உள்ள authentication history என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
7. ஆதாருடன் இணைக்கப்பட்ட OTP, பயோமெட்ரிக்ஸ் மற்றும் புள்ளி விவரங்கள் மூலம், ஆறு மாதங்களாக உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்ற அனைத்து தரவுகளும் தெரியும்.
இதன் மூலம் கடந்த ஆறு மாதங்கள் நமது ஆதார் எண்களை கொண்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்ன அப்டேட் செய்யப்பட்டு? உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் காண முடியும்.
இதையும் படிங்க : தேர்தல் பத்திரம்: ரூ.650 நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?