ETV Bharat / technology

ஐபோன் 16 வாங்கியாச்சு; ஆனா பழைய போன்ல இருந்து வாட்ஸ்அப் டேட்டா மாத்துறது எப்படி! - iPhone WhatsApp Backup

iPhone WhatsApp data transfer: புதிய ஆப்பிள் ஐபோன் 16 (iPhone 16) அல்லது ஏதேனும் ஐபோன் மாடல் புதிதாக வாங்கிய நபர்களுக்கு, பழைய போனில் இருக்கும் வாட்ஸ்அப் தரவுகளை எளிதாக மாற்றும் (WhatsApp Backup) வழிகள் இருக்கிறது.

transfer old apple iphone whatsapp data to new iphone 16 article thumbnail
பழைய ஐபோன்களில் இருந்து புதிய ஐபோன் 16 மற்றும் பிற மாடல்களுக்கு வாட்ஸ்அப் தரவுகளை மாற்றும் வழிகள். (Credits: ETV Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 19, 2024, 11:44 AM IST

எப்போது புதிய ஸ்மார்ட்போன் வாங்கினாலும், பழைய போனில் இருக்கும் வாட்ஸ்அப் தரவுகளை பரிமாறுவதில் (WhatsApp Data Transfer) சிக்கல் எழும். முக்கியமாக ஐபோன் பயனர்களுக்கு கூடுதலான பிரச்சினைகள் வரும். இப்படி புதிதாக ஐபோன் 16 (iPhone 16) அல்லது ஏதேனும் ஐபோன் மாடலை வாங்கிய பயனர்களுக்கு, வாட்ஸ்அப் டேட்டாக்களை மாற்றுவதில் சிக்கல் இருந்தால், இந்த செய்தி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் பழைய ஐபோனில் உள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் தரவுகளை புதிய ஐபோனுக்கு எளிமையாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம். இவற்றை நீங்கள் தொடங்கும் முன் உங்கள் ஐஓஎஸ் பதிப்பும், வாட்ஸ்அப் பதிப்பும் அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேகமான செய்முறை (Quick Start):

  • இது பழைய ஐபோனிலிருந்து உங்கள் புதிய ஐபோனுக்கு தரவை மாற்றுவதற்கான மிகவும் நம்பகமான முறையாகும்.
  • உங்கள் பழைய மற்றும் புதிய ஐபோன்களில் வைஃபை, ப்ளூடூத் ஆகியவற்றை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
  • இரண்டு ஐபோன்களும் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ள ஏதுவாக அருகில் இருப்பதை உறுதி செய்யவும்.
  • "Transfer from iPhone" எனும் ஆப்ஷனை தேர்வுசெய்து, உங்கள் பழைய ஐபோனில் இருக்கும் தரவுகளை புதிய ஐபோனுக்கு மாற்றலாம்.

அரட்டைகளை மாற்றுவது எப்படி?

ஐ-கிளவுட் (iCloud) உதவி இல்லாமல், உங்கள் தனிப்பட்ட செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை நேரடியாக ஐபோன்களுக்கு இடையே எளிதாக நகர்த்துவதற்கு அரட்டை பரிமாற்ற அம்சத்தையும் "Chat Transfer" வாட்ஸ்அப் வழங்குகிறது.

இதையும் படிங்க:
iOS 18 உடன் வரும் ஆப்பிள் ஐபோன் 15: அமேசானில் 31,000 ரூபாய் தான்; எப்படி வாங்குவது? - Apple iPhone 15 Amazon Offer

இந்த முறையைக் கையாளும் போது, பழைய போனில் இருக்கும் வாட்ஸ்அப் தரவுகள் அனைத்தும் புதிய ஐபோனிற்கு மாற்றப்படும். இதற்காக பழைய போனில் பயன்படுத்திய அதே தொடர்பு எண்ணை புதிய போனில் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.

  • இதற்காக பழைய ஐபோனில் Settings > Chats > Transfer chats to iPhone > Start என்ற ஆப்ஷன்களுக்கு நகரவும்.
  • பின்னர் QR குறியீடு காட்டப்படும். அதை அப்படியே வைத்துவிட்டு புதிய ஐபோன் வாட்ஸ்அப் பக்கம் வரவும்.
  • அதில் உங்கள் தொடர்பு எண்ணை உறுதிப்படுத்தும் செய்முறையை முடித்துவிட்டு, "Chat History Tranfer" ஆப்ஷனை உறுதிப்படுத்தித் தொடரவும்.
  • பின்னர் பழைய போனில் காட்டப்பட்ட QR குறியீட்டை புதிய ஐபோன் வாட்ஸ்அப் கேமராவைக் கொண்டு ஸ்கேன் செய்யவும்.
  • இதனையடுத்து நடைபெறும் தரவு பரிமாற்றம் முடியும் வரை காத்திருக்கவும்.
    transfer old apple iphone whatsapp data to new iphone 16 article thumbnail
    ஐபோன் வாட்ஸ்அப் டேட்டா டிராஸ்ஃபர் (Credits: WhatsApp)

என்னென்ன பேக்கப் வழிகள் இருக்கிறது?

பொதுவாக ஐபோன்களுக்கு இடையே வாட்ஸ்அப் தரவுகளை மாற்றுவதற்கு உதவும் மூன்று பேக்கப் வழிகள் உள்ளன. அதில் வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் பேக்கப் வசதி பிரதானமானதாகும். அதனையடுத்து "iCloud" வழியாக தரவுகளைப் பேக்கப் செய்து பயன்படுத்தலாம். கூடுதலாக, MacOS அடிப்படையிலான கணினி இருந்தால், அதன் வாயிலாகவும் எளிதாக Backup செய்யலாம்.

இதையும் படிங்க:
செயலிழந்த ஜிமெயில் அக்கவுண்ட்: செப்.20 தான் கடைசி நாள்... உடனடியா இத பண்ணா; உங்க கூகுள் கணக்க காப்பாத்தலாம்! - Stop Google Account from Deleting

  1. வாட்ஸ்அப் பேக்கப்: WhatsApp > Settings > Chats > Chat Backup > create a backup. இந்த படிகளைப் பயன்படுத்தி, ஐகிளவுட்-இல் டேட்டாக்களை சேமித்து, அதன்பின்னர் அதே ஐகிளவுட் கணக்கை புதிய ஐபோனில் நிறுவிப் பயன்படுத்தலாம்.
  2. ஐகிளவுட் பேக்கப்: ஐபோன் செட்டிங்சைத் திறந்து, அதில் காட்டப்படும் உங்கள் பெயரை கிளிக் செய்து, அதனைத் தொடர்ந்து iCloud > iCloud Backup எனும் ஆப்ஷன்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  3. கணினி பேக்கப்: ஆப்பிள் நிறுவனத்தின் மேக் இயங்குதளத்தில் செயல்படும் கணினியை ஐபோனுடன் இணைத்து, iTunes or the Finder app > Back Up Now எனும் ஆப்ஷன்களைத் தேர்வு செய்து பேக்கப் செய்து கொள்ளலாம்.

இதில் வாட்ஸ்அப் அல்லாத பேக்கப் முறைகளுக்கு எண்டு-டூ-எண்டூ என்கிரிப்ஷன் பாதுகாப்பு அம்சம் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் வாயிலாக பேக்கப் செய்யப்படும் தரவுக்கு மட்டுமே, மெட்டா பொறுப்பேற்கிறது. மற்றவை அந்தந்த முறைகளைக் கையாளும் நிறுவனங்களின் பயன்பாடுகளைப் பொறுத்ததாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.