ஐதராபாத் : உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், தனது பயனர்களுக்கு தேடுபொறியில் புதுவித அனுபவத்தை வழங்கும் விதமாக மூன்று செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த மூன்று செயற்கை நுண்ணறிவு வசதிகளும் கூகுள் க்ரோமில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கூகுள் க்ரோமில் அடுத்தடுத்த பக்கங்களுக்கு மாற ஏதுவான ஸ்மார்ட் டேப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஏஐ வசதியில் நமக்கான கருப்பொருளை (Theme) நாமே வடிவமைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக கூகுள் டிராப்ட்ஸ் (drafts) தொடர்பான ஏஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக இந்த வசதிகள் Chrome version M121 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த வசதியினை பயனர்கள் பயன்படுத்த க்ரோமில் உள்ள செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொட்டு Navigate to the ‘Experimental AI’ page என்ற இயக்கத்தை கட்டளையிடும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Macs மற்றும் Windows PC கணினிகளில் விரைவில் இந்த ஏஐ வசதிகளை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனறும் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த வசதிகள் பொது வெளியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கல்வி மற்றும் இதர பயன்பாட்டுக்காக கணினியை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை விரும்பாத பட்சத்தில் எளிதில் disabled செய்து கொள்ள முடியும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : Oscars 2024: 13 பிரிவுகளில் பரிந்துரை! எலைட்டை கோட்டைவிட்ட ஓபன்ஹெய்மர்! அது என்ன எலைட் பிரிவு?