விண்வெளி ஆய்வில் பல அரசாங்களுக்கு மேலாக புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது எலான் மஸ்கின் (Elon Musk's) ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம். எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. தொழில்முறை விண்வெளி வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் விண்வெளிப் பயணத்திற்கு, அது அல்லாத குழு ஒன்றை அனுப்பி ஸ்பேஸ் வாக் செய்யவைத்து உலகத்தை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
HARMONY OF RESILIENCE: Recorded in space and sent to Earth via @SpaceX’s @Starlink constellation, Polaris Dawn crewmember and violinist @Gillis_SarahE invites you to enjoy this music moment in support of @StJude & @ElSistemaUSA → https://t.co/My8cUwAWzg pic.twitter.com/OoxTllCZNP
— Polaris (@PolarisProgram) September 13, 2024
இந்த திட்டத்திற்கு ‘போலரிஸ் டான்’ (Polaris Dawn Program) என்று பெயரிடப்பட்டது. இது தனியார் நிதியுதவியுடன் இயங்கும் முதல் விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. பணக்காரத் தொழிலதிபரான ஜாரெட் ஐசக்மேன் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கி, அதன் முதல் பயணத்தில் கமாண்டர் பொறுப்பு வகித்து, நால்வர் குழுவை வழிநடத்தியுள்ளார். அந்தவகையில், ‘போலரிஸ் டான்’ திட்டத்தின் வெற்றி பாதை, சாதித்தது என்ன என்பது குறித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம்.
இதையும் படிங்க: விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?
ஸ்பேஸ் எக்ஸ் ‘போலரிஸ் டான்’ சாதனை பாதையின் 10 முக்கிய நிகழ்வுகள்:
- பணம் பரிமாற்றச் செயலாக்க வணிகமான ஷிஃப்ட் 4-இன் (Shift4) நிறுவனர் ஜாரெட் ஐசக்மேன் (Jared Issacman), அவரது நண்பரான ஓய்வுபெற்ற விமானி ஸ்காட் கிட் போட்டீட் (Scott Kidd Poteet), இரண்டு ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர்களான அன்னா மேனன், சாரா கில்லிஸ் ஆகியோர் விண்வெளி பயணத்தை மேற்கொண்டனர்.
- இதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ‘போலரிஸ் டான்’ என்ற விண்கலத்தில், இவர்கள் அனைவரும் செப்டம்பர் 11 அன்று விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- இந்த விண்கலத்தைச் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.
- ‘போலரிஸ் டான்’ விண்கலமானது பூமியின் சுற்றுப்பாதையில் பயணித்து இறுதியில் பூமிக்கு மேலே 1,400 கிலோமீட்டர் (870 மைல்கள்) தொலைவு வரைச் செல்லும் திறன் கொண்டதாகும்.
- 1970-களில் சோதனை செய்யப்பட்ட நாசாவின் அப்பல்லோ திட்டம் நிறுத்தப்பட்டதில் இருந்து, இதுவரை எந்தவொரு விண்வெளி வீரரும் இவ்வளவு தூரம் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பயணத்தில் விண்வெளி வீரர்கள் ‘வான் ஆலன் ரேடியேஷன் பெல்ட்’ (Van Allen radiation belt) எனப்படும் பயங்கர கதிர்வீச்சுக் கொண்ட வழியில் பயணிப்பார்கள். ஆனால் இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விண்வெளி உடைகளால், விண்வெளி வீரர்கள் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கபப்டுவார்கள்.
- அதாவது மூன்று மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தால் ஏற்படும் கதிர்வீச்சு அனுபவத்திற்கு இணையாக, ‘வான் ஆலன் ரேடியேஷன் பெல்ட்’ பாதையில் கதிர்வீச்சு இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
- முதலில் இந்திய நேரப்படி செப்டம்பர் 12 அன்று மாலை 4.22 மணிக்கு ஜாரெட் ஐசக்மேன் விண்வெளி கேப்ஸ்யூலில் இருந்து வெளியேறி ஸ்பேஸ் வாக் செய்தார். அதனைத் தொடர்ந்து 15 நிமிட இடைவெளியில் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லிஸ் கேப்ஸ்யூலில் இருந்து வெளியேறி தனது ஸ்பேஸ் வாக்கை நிறைவு செய்தார்.
- பூமியின் மேலே 700 கிலோமீட்டர் (435 மைல்கள்) தொலைவில் இவர்கள் தங்களின் ஸ்பேஸ் வாக்கை முயற்சி செய்து பார்த்தனர். இதன் நேரலையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புக்கும், டிராகன் விண்கலத்திற்கும் இடையே செயற்கைக்கோள் வழியாக நடத்தப்படும் லேசர் தொடர்பு சோதனைகளை இந்த குழு மேற்கொள்ள உள்ளது.
Watch Dragon’s first spacewalk with the @PolarisProgram’s Polaris Dawn crew https://t.co/svdJRkGN7K
— SpaceX (@SpaceX) September 12, 2024