ETV Bharat / technology

பழைய மாடல் ஆப்பிள் போன் விலைக்கே புதிய ஐபோன் 16 ப்ரோ வாங்கலாம் - இங்கு தான் விலை குறைவு? - iphone 16 price in dubai

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 10, 2024, 5:25 PM IST

Updated : Sep 10, 2024, 5:30 PM IST

ஆப்பிள் ஐபோன் 16 மாடல்கள் விற்பனைக்கு வரும் நிலையில், இந்தியாவை விட சில நாடுகளில் அதன் விலை குறைவாக பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த நாடுகளில் நாம் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) போன்களை விலைக் குறைவாகப் பெறமுடியும் என்பதைப் பார்க்கலாம்.

apple iphone 16 pro models
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (Credits: Apple)

ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அதில் இடம்பெற்றன. இந்த நேரத்தில் புதிய ஐபோனை எந்த நாட்டில் இருந்து விலைக் குறைவாகப் பெறமுடியும் எனப் பயனர்கள் இணையத்தை உலாவி வருகின்றனர். அவர்களுக்காகவே, ஐபோன் 16 சீரிஸ் இந்திய விலையுடன், பிற நாட்டு விலையை ஒப்பிட்டு கீழே தொகுத்துள்ளோம். அந்தந்த நாட்டு வரி அமைப்பிற்கு ஏற்றவாறு விலைகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் நான்கு ஐபோன்களையும் பயனர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் செப்டம்பர் 20 முதல் ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகளில் நேரடியாக போன்களை வாங்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

apple iphone 16 series price list
ஐபோன் 16 சீரிஸ் விலைப் பட்டியல் (Credits: ETV Bharat)

ஐபோன் 16 / 16 பிளஸ் விலை (iPhone 16 / 16 Plus Price) குறைவாகக் கிடைக்கும் நாடு:

ஆப்பிள் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களும் போட்டி விலையில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஐபோன் 16 அடிப்படை மாடலை விட கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் அடிப்படை மாடல் விலை அதிகம். ரூ.5,000 வங்கித் தள்ளுபடியைக் கருத்தில் கொண்டால், 128 ஜிபி வகை ஐபோன் 16 ஸ்மார்ட்போனை இந்தியாவில் 74,900 ரூபாய்க்கு வாங்கலாம்.

இருப்பினும், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாட்டுச் சந்தைகளில் இன்னும் மலிவாகக் கிடைக்கிறது. அங்கு சுமார் ரூ.67,000 முதல் அடிப்படை மாடலின் விலைத் தொடங்குகிறது. இந்தியர்கள் இன்னும் எளிதாக வாங்க வேண்டும் என்றால், உள்நாட்டில் வாங்கும் விலையில், சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய ஐபோனை வாங்கி வரலாம். சீனாவில் ரூ.69,000 எனும் விலையில் ஐபோன் 16 அடிப்படை மாடல் விற்பனைக்கு வருகிறது.

ஐபோன் 16 ப்ரோ விலை (iPhone 16 Pro Price) குறைவாகக் கிடைக்கும் இடம்:

ஐபோன் 16 ப்ரோ விலையை முந்தைய ஐபோன் 15 ப்ரோ உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பல ஆச்சரியத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, புதிய 6.3 இன்ச் ஐபோன் 16 ப்ரோ மாடலை சுமார் 90,000 ரூபாய்க்கு வாங்க முடியும். இது தற்போதைய ஐபோன் 15 ப்ரோ விலையை விட குறைவாகும். இந்தியாவில் புதிய ப்ரோ மாடலின் அடிப்படை வகையின் விலை ரூ.1,19,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகைகள் போக இந்த போனை ரூ.1,14,900 என்ற விலைக்கு வாங்கலாம். ஆனால், நம் அண்டை நாடான சீனா, துபாயில் ரூ.15,000 குறைவாக; அதாவது ஒரு லட்ச ரூபாய்க்குள் ஐபோன் 16 ப்ரோ மாடலை வாங்கி விடமுடியும்.

மலிவு விலை ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max Price)

ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் மாடலைப் பொருத்தவரை அமெரிக்கா தான் குறைந்த விலைப் பட்டியலைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதன் அடிப்படை 256ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,44,900 ஆக உள்ளது. வங்கிச் சலுகை ரூ.5,000 தவிர்த்தால், இந்த ஸ்மார்ட்போனை உள்நாட்டில் ரூ.1,39,900-க்கு வாங்கலாம். அமெரிக்க சந்தையில் இந்த மாடலின் விலை ஒரு லட்ச ரூபாய் மட்டுமே. மேலும், சீனா, துபாய் போன்ற அண்டை நாடுகளிலும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை விலைக் குறைவாக வாங்கலாம்.

இதையும் படிங்க: பணியிடத்தில் பிரச்சினையா? அப்போ இத பண்ணுங்க பெண்களே..!

Last Updated : Sep 10, 2024, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.